திருமணம் ஆன பெண்ணிற்கும் ஆணிற்கும்

நெருப்பை அணைக்க வழி தேடுவதை விட நெருப்புப் பிடிக்காமல் இருக்க வழி செய்வது மிக பாதுகாப்பானது.

ஒரு பெண்ணுக்கு தான் எதிர்பார்த்தபடி தன் கணவனிடம் இருந்து இரக்கமும், அன்பும், அரவணைப்பும் கிடைக்காமல் போகும்போது, காதல் வார்த்தைகள் அவள் காதை எட்டாமல் போகும்போது, அவ்வப்போது அன்புப் பரிசுகள் அவளை வந்தடையாமல் இருக்கும் போது அவளது பெண்மைக்கு மரியாதை கிடைக்கவில்லை என்று அர்த்தமாகிவிடுகிறது, அவளது பெண்மை அங்கே குழி தோண்டி புதைக்கப்படுகிறது என்று அர்த்தமாகிவிடுகிறது.

காதல் தாகத்துக்காக ஏங்கும் அவள் வெளியிலிருந்து கேட்கும் சாதாரண வார்த்தைகளையும் காதல் வார்த்தையாக எடுக்க நிர்பந்திக்கப்படுகிறாள். இவள் கலங்கிய நீரில் மீன் பிடிப்படவர்களுக்கு லாவகமாக இரையாகிவிடுகிறாள்.

பாதிக்கப்படுவதை சாட்டாக வைத்து பாவம் செய்வதை ஒரு போதும் சரிகாண முடியாது. அதனை வைத்து தவறான தொடர்புகளுக்கு நியாயம் கற்பிக்கவும் முடியாது. ஆனாலும் பாதிக்கப்படும் போது பாவத்தில் விழுவதற்காக வழிகள் எளிதாகி விடுகின்றன.

எனவேதான் நெருப்பை அணைக்க வழி தேடுவதை விட நெருப்புப் பிடிக்காமல் இருக்க வழி செய்வது பொறுப்பாளிகள் மீது அவசியகி விடுகிறது.

அதே போன்றுதான் ஒரு ஆண் தான் எதிர்பார்த்த படி தன் மனைவியிடம் இருந்து மதிப்பும் மரியாதையும், கவனிப்பும் கிடைக்காமல் போகும் போது தன் ஆண்மை அவமதிப்படுவதாக நினைக்கிறான். பிற பெண்களிடமிருந்து வரும் சாதாரண வார்த்தைகளையும் கவனிப்பாக நினைக்க வாய்ப்பாகி விடுகின்றது. தன்னை கவனிப்பதாக நினைக்கும்
பெண்ணுக்கு லாவகமாக இரையாகலாம்.

பாதிக்கப்படுவதை சாட்டாக வைத்து பாவம் செய்வதை ஒரு போதும் சரிகாண முடியாது. அதனை வைத்து தவறான தொடர்புகளுக்கு நியாயம் கற்பிக்கவும் முடியாது. ஆனாலும் பாதிக்கப்படும் போது பாவத்தில் விழுவதற்கான வழிகள் எளிதாகி விடுகின்றன.

எனவேதான் நெருப்பை அணைக்க வழி தேடுவதை விட நெருப்புப் பிடிக்காமல் இருக்க வழி செய்வது மிகவும் பாதுகாப்பானது என்கிறோம்.

இதே போன்றுதான் வீட்டில் அன்பும் பரிவும்
காட்டப்படாமல், கடுமையாக நடத்தப்படும் ஒரு இளம்பெண் வீட்டுக்கு வெளியே அவைகளை தேட வாய்ப்பாகி விடுகிறது. இப்படிபட்ட இளம்பெண் காட்டில் விடப்பட்ட மான் பேன்றவள், பசித்த ஓநாய்களுக்கு எப்போதும் தீனியாகலாம்.

நாம் நமக்கு கடமைப்பட்டவர்களுக்கு அன்பையும் பரிவையும், பூரண கவனிப்பையும் காட்டும் போது அவர்கள் பாதாளத்தில் விழுவதற்கான கதவுகள் மூடப்படுகின்றன, பலத்த கோட்டைக்குள் பாதுகாப்பாக வந்துவிடுகின்றனர்.

வெடித்து சிதறிய பிறகு பொருட்களை ஒன்று சேர்ப்பதை விட வெடித்து சிதற வாய்ப்புள்ள பொருட்களை அகற்றி வைப்பதானது மிகவும் பாதுகாப்பானது.

✍ தமிழாக்கம் / imran farook

பின்னூட்டமொன்றை இடுக