நபிகள் நாயகத்தின் இறுதி பேருரை …!!!

41c40c76c6b785bb54d47c788df75ad6

மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.
(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

தலைமைக்குக் கீழ்ப்படிவீர்!

மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!
(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

அராஜகம் செய்யாதீர்கள்!

அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள்.
(ஸஹீஹுல் புகாரி 4403)

உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான். நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)

பணியாளர்களைப் பேணுவீர்!

மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் பணியாளர்கள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்!
(தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)

அநீதம் அழிப்பீர்!

அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது.
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)

முறைதவறி நடக்காதீர்!

அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்.எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது.
(இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789) [1]

உரிமைகளை மீறாதீர்!

மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது)

பெண்களை மதிப்பீர்!

கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி தண்டிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)

இரண்டைப் பின்பற்றுவீர்!

மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)

எச்சரிக்கையாக இருப்பீர்!

மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!
(பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)

இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும்.
(ஸஹீஹ்ல் புகாரி 4402)

சொர்க்கம் செல்ல வழி!

மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!.
(ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109)

குற்றவாளியே தண்டிக்கபடுவார்!

ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார்.
(ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.)
மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. ( ளிலாலுஸ் ஜன்னா 1061)

இஸ்லாம் முழுமையாகி விட்டது!

இறுதியில் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “”நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம் என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி “”இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! என்று முடித்தார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் 2334)

இறுதி இறை வசனம்.

இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:

“”இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.) (அல்குர்அன் 5:3)
ஸஹீஹ்ல புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல் மன்ஸுர்)

அவர்களை முஸ்லிம்கள் என்று சொல்லாதீர்கள்…

A relative of a victim of the explosion at St. Anthony's Shrine, Kochchikade church reacts at the police mortuary in Colombo
*********
இன்னொரு மனிதரின் உயிரைப் பறிப்பதற்கே கல்நெஞ்சமும் வன்மமும் இருந்தால்தான் சாத்தியமாகும்.

வழிபாட்டுத் தலங்களில் பண்டிகை நாளில் திரண்டிருக்கின்ற அப்பாவிகளைக் கொய்வதற்கு எந்த அளவுக்கு வன்மமும் வெறுப்பும் காழ்ப்பு உணர்வும் இருந்திருக்க வேண்டும்?

பண்டிகை நாளின் சந்தோஷத்தில் திளைத்திருக்கின்ற முகங்களையும் மகிழ்ச்சி நிறைந்த குடும்பங்களையும் நேருக்கு நேர் பார்த்த பிறகும் குண்டு வெடித்துச் சாகடிப்பதற்கு எப்படி மனம் வந்திருக்கும்? கல்மனம் கொண்டவர்களா, இவர்கள்?

இலங்கையிலிருந்து வருகின்ற தகவல்களையும் செய்திகளையும் பார்க்கின்ற போது மனத்தில் பீறிட்டுக் கிளம்புகின்ற கேள்விகள்தாம இவை.

ஏன்? ஏன்? ஏன்? ஏன் இப்படி அப்பாவிகளைக் கொல்கின்றார்கள்?

எதற்காக? எதற்காக? எதற்காக இப்படி இளங்குருத்துகளைச் சாகடிக்கின்றார்கள்?

இதனால் இவர்களுக்குக் கிடைப்பதுதான் என்ன? என்ன? என்ன?

குஜராத்தை நரேந்திர மோடி ஆண்டு கொண்டிருந்த போதும் இப்படித்தானே நூற்றுக்கணக்கான அப்பாவிகளை இந்துத்துவ பயங்கரவாதிகள் உயிரோடு கொளுத்தியே கொன்று குவித்தார்கள்…

ஈராக் மீது ஜார்ஜ் டபுள்யூ புஷ் என்கிற உலக மகா பயங்கரவாதி படையெடுத்துச் சென்ற போது இப்படித்தானே நூற்றுக்கணக்கான அப்பாவிகள்மீது அமெரிக்க நியோ கான் வெறியர்கள் குண்டு வீசி சாகடித்தார்கள்….

காஜாவில் யூத ஸியோனிஸ்டுகளும் இப்படித்தானே சின்னச் சின்னக் குழந்தைகளை தினம் தினம் கொன்று குவித்தார்கள்….

நார்வேயில் ஒரு கிறித்துவ தீவிரவாதி மனம் போன போக்கில் சரமாரியாகச் சுட்டுத் தள்ளி அப்பாவிகளை இப்படித்தானே வேட்டையாடினான்….

இவர்கள்
கல்நெஞ்சக் காரர்கள்…

வெறுப்பின் புதல்வர்கள் இவர்கள்…

வெறுப்பில் பிறந்து வெறுப்பில் வளர்ந்து வெறுப்பை சுவாசித்து வெறுப்பைத் தின்று வெறுப்பையே நெருப்பாக வளர்த்து வெறுப்பின் நெருப்பை அறுவடை செய்கின்றவர்கள் இவர்கள்….

இவர்களை முஸ்லிம்கள் என்று சொல்லாதீர்கள்…

இவர்களை இலங்கையின் இந்துத்துவ ஃபாசிஸ்டுகள் என்று கண்டியுங்கள்.

இவர்களை இலங்கையின் யூத சியோனிஸ்டுகள் என்று ஒதுக்கித் தள்ளுங்கள்.

இவர்களை இலங்கையின் அமெரிக்க நியோ கான் வெறியர்கள் என்று இகழ்ந்து ஒதுக்குங்கள்.

ஏனெனில் இவர்கள் எல்லாருமே ஒரே இனத்தவர்களே.

இவர்கள் முஸ்லிம்கள் அல்லர்.

யூத சியோனிஸ்டுகளின் உறவுப் பிள்ளைகள் இவர்கள்.

குஜராத்தில் இரத்த தாண்டவம் செய்த வெறியர்களின் இரத்த பந்தங்கள் இவர்கள்.

ஈராக்கில் வேட்டையாடிய அமெரிக்க நாய்களின் தோழர்கள் இவர்கள்.

இவர்கள்தாம் ஃபிர்அவ்னின் வாரிசுகள்.

இவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கித் தள்ளுவோம்.

ஒருமித்தக் குரலில் கண்டித்து இவர்களின் கொடூரங்களுக்கு முற்றுப் புள்ளி வைப்போம்.

– டி அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

புத்தளம் குப்பை கிடங்கு

54386818_484925308706637_6483226667723522048_n

இலங்கை நண்பர்களால் அதிகமாக
பகிரபடுகின்ற செய்தியாக புத்தளத்தின்
குப்பை கிடங்காக்கும் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடப்பதை அறிகிறேன்.

பசுமை தார்பாயம் அமைக்கபோகிறோம்
என்று கூறி ஆட்சியில் அமர்ந்தபின்
அயல்நாட்டு கார்ப்பரேட்களுடன்
சேர்ந்து குப்பை கிடங்கை அமைக்கும் திட்டம் மிகவும் அநியாயமானது .
பசுமையும் விவசாயமும் நிலமும் பாதிக்கும், கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்பு, நீர், நிலம், காற்று இது மூன்றையும் மாசுபடுத்தி ஒரு ஊரையே அழிக்க முனையும் இலங்கை அரசு மிக மோசமான செயல்.

குறிப்பாக இரண்டு லட்சத்துக்கும் மேற்ப்பட்ட முஸ்லீம்கள் அதிகமாக வாழும்
பகுதி புத்தளம்.

தமிழகத்தில் கதிராமங்களம், நெடுவாசல்
மீத்தேன் , ஹைட்ரோட் கார்பன் திட்டத்துக்காக அந்த கிராம மக்கள் போராடுவது போல் இலங்கையில் புத்தளம் போராட்ட களமாகி உள்ளது என்பதை உண்மை.

இலங்கை அரசு இந்த மோசமான செயலை கை விட வேண்டும். உலகமே
கார்ப்பரேட் வசமாகினால் நாம் கடைசி வரை அடிமைகள் போல் வாழ நேரிடும்.

காஷ்மீர் தாக்குதல் ….மதநெறிப்பும்

52508149_2366566096960933_5088747706944323584_n

காஷ்மீர் புல்வாலா பகுதியில் தற்கொலைபடை முறையில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடத்திய
சில மணி நேரங்களில் ஒரு தீவிரவாதியின் வாக்குமூலம் நம்மை
நிலைகுலைய வைத்தது.

ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தின்
மீதும் ஜிஹாத் என்னும் புனித போரின்
நிலைபாட்டை தெளிவுபடுத்தும் கடமை
நமக்கு உண்டு . ஏனெனில் அந்த தீவிரவாதியில் பேச்சில் ஜிஹாத் என்ற நிலைபாட்டில் தான் அவன் அந்த செயலை செய்து அவன் இறந்த பின் சொர்கத்தில் இருப்பேன் என்று கூறி விடை பெறுகிறான்.

அவனின் செயலுக்கு இஸ்லாத்திற்கும்
எந்த தொடர்பும் இல்லை மாறாக மார்க்கம்
தடுத்த ஹரமாக்கிய தற்கொலை முறையை தனது தாக்குதலாக பயன்படுத்தியது வீரமல்ல கோளைதனத்தின் உச்சம்.

தீவிரவாத குழுக்கள் அனைத்தும் தற்கொலைபடை தாக்குதல் முறை கூடும்
என இளைஞர்களை குழப்பி மூளைசலவை செய்து தங்களின் இயலாமையால் ஏற்பட்ட கோளைதனத்தை வெளிபடுத்தியுள்ளது.

கஷ்மீரில் போராடுகிறார்களே அவர்களின் போராட்டத்தின் ஒரு பகுதிதானே இது. இன்னும் எவ்வளவு கஷ்மீரிக்கள் தங்கள் வாழ்வுரிமைக்காக
போராட முடியும் என்று ஒரு தரப்பு ஆதங்ககளை வெளிபடுத்துகிறது.
கஷ்மீரிகள் அடக்குமுறைக்கு உட்படுகிறார்கள் அதை ஏற்கிறேன்.

ஆனால் இந்த தாக்குதலில்
தீவிரவாதிகள் தங்களின் ஆயுதமாக கஷ்மீரிகளை பயன்படுத்தி கொண்டுள்ளனர் என்பதே வேதனை.

இதில் அரசியல் இருக்கிறது. 350 கிலோ
ஆயுதங்களை சப்லை செய்துள்ளது சீனா அல்லது பாகிஸ்தான், என பல வாதங்கள் வைக்கப்படுகிறது. ஆனால் இது இஸ்லாத்தின் கோட்பாட்டின் மீது தொடுக்கபட்ட போர் என்பதே உண்மை.

மீண்டும் ஒருமுறை இஸ்லாத்தின் பெயரால் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.
தீவிரவாத அமைப்புகள் பற்றி உலமாக்கள்
சபை தெளிவான நிலைபாட்டை எடுத்துள்ளது.

IS மற்றும் அல்கொய்தா போன்ற அமைப்புக்கும் அவர்களின் செயல்பாடுகளுக்கும் இஸ்லாத்திற்கும்
எந்த சம்பந்தமும் இல்லை என ஏற்கனவே
நம் இளைஞர்கள் எச்சரிக்கை செய்யபட்டுள்ளார்கள்.

அதே வரிசையில் ஜெய்ஸ் ஈ முகமது என்ற
அமைப்பு இஸ்லாமிய அமைப்பு என்ற போர்வையில் தனது மிருகதனத்தை வெளிபடுத்துகிறது.

அப்பாவி பத்திரிக்கையாளர்களை கொள்வது அதை வீடியோவாக வெளியிட்டு நாங்கள் இப்படிதான்
கொள்வோம் என வெறிதனத்தை
வெளிபடுத்தி அல்லாஹ் அக்பர்
என்று குக்குரலிடுகிறார்கள் என்றால்
அவர்களின் நோக்கம் . நாங்கள் இப்படிதான் மாற்றுமதத்தினரை
கொள்வோம். இது தான் எங்கள் இஸ்லாம் என்று இஸ்லாத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்த எந்த இஸ்லாமியனும் விரும்பமாட்டான் . எனவே அவர்கள் ஜிஹாதிகளோ வீரர்களோ அல்ல.
இஸ்லாத்தை இழிவுபடுத்த
உருவாக யூத கைகூலிகள்.
அவர்களிடம் சிக்கிய பலிஆடுகளே
ஆதில் போன்றோர்.

ஆதில் என்ற அந்த இளைஞரின் வீடியோவில் நபிகளாரின் பெயரை
அவன் உச்சரிக்கும் போது அவன் மீதான
கோபம் அதிகரிக்கிறது.

இந்த உலகத்தில் எந்த ஒரு உயிரும் வீணாக போக கூடாது. போரில்
மரம் செடிகொடிகளை கூடி வெட்டகூடாது
என போரில் நீதியையும் நேர்மையான வீரத்தையும் போதித்த என் நபியின் பெயரை இதுபோன்ற நாய்கள் உச்சரிப்பது எரிச்சலூட்டுகிறது.

இவர்கள் எதை இஸ்லாத்தின் பெயரை
கொண்டு செய்கிறார்கள் என்பதை பார்க்கும் போது இஸ்லாத்தை அழிக்க இழிவுபடுத்த திட்டம் தீட்டி கிளம்பிய கூட்டங்கள் இவை
இதை நாம் உணர்வதும் அதை மக்களுக்கு தெளிவுபடுத்துவதும் காலத்தின் கட்டாயம்.

ஜிஹாத் என்ற வார்த்தைக்கு நேரடி பொருள் முயற்சித்தல்.
மார்க்க அடிப்படையில் உரிமைமீட்புக்கான போராடுதல்,
இறைவனின் பெயரை உயர்த்த
தங்களை அர்பணிப்பது.

நட்புடன்
ஜுபைர் முஹமத் அல்புஹாரி.

உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் ஹுவைலித் ரழியல்லாஹு அன்ஹா

உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் ஹுவைலித் ரழியல்லாஹு அன்ஹா …
49432669_2336026500014893_7779543927614341120_n
அல்லாஹ்வின் தூதரே…
கதீஜா (ரழி) அன்ஹா
உங்களை விட்டு பிரிந்து மண்ணோடு மறைந்து போய்விட்டார்கள்.

வயதில் மூத்த அந்தப் பெண்ணைப் பற்றியா இன்னமும் நீங்கள் நினைத்துக் கொண்டேயிருக்கின்றீர்கள்? அவரைக் காட்டிலும் அறிவிலும், பிரியத்தாலும், அழகாலும் சிறந்த மனைவிமார்கள் நாங்கள் உங்கள் அருகில் இல்லையா?,

நீங்களோ அந்த கதீஜா (ரழி) எனும் பெண்ணை இன்னமும் நினைவில் கொண்டிருக்கிறீர்கள்? என நான் நபியவர்களை ﷺ ரோஷத்துடன் ஒருமுறை கேட்டேன் என்கிறார் அன்னை ஆயிஷா رضی الله عنها.,

அப்பொழுது நபியவர்கள், உனக்குத் தெரியுமா? ஆயிஷா, அது ஒரு வேதனைமிக்க காலமாக இருந்தது, மக்காவில் மக்கள் என்னைப் புறக்கணித்து, ஒதுக்கி நான் ஒரு பொய்யன் எனக்கூறி இழிவு செய்து தங்களில் ஒரு மனிதராகக் கூட மதிக்காமல் அந்த சமூகமே என்னைப் புறந்தள்ளிய போது,

நான் சாய்ந்திட ஒரு தோளாக, என்னை அன்பொழுக அணைத்து, உண்ண உணவும் உடுத்த உடையும் ஒழுக்கமான ஒரு பணியும் தந்து தனது செல்வங்களை எனக்காக அள்ளி அள்ளி ஈந்து, பிறரது ஏச்சுக்களையும் கூட பொருட்படுத்தாது, கண்ணின் இமையாக என்னைக் கருதிக் காத்து நேசத்தையும் காதலையும் மட்டுமே காட்டி, தாயிழந்த என் ஏக்கம் தீர்க்க வாஞ்சையுடன் வாரியணைத்து அரவணைப்பை மட்டுமே என் கல்பில் விதைத்து ஆருயிராய், பிறர் துன்பம் என்னைத் தீண்டாவண்ணம் காத்து நின்ற அந்தப் பெண் எனக்கு இறைவன் அளித்த தாஹிரா எனும் பொக்கிஷம் அல்லவா… என நபி ﷺ சொன்னார்கள்.

ஒரு முறை கையில் ஒரு தட்டில் உணவைச் சுமந்து அண்ணலை நோக்கி வந்து கொண்டிருந்த கதிஜா உம்மாவை முந்தியவண்ணம் அங்கு வந்த வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபியிடம் சொன்னார்…

இறைவனின் தூதரே அந்த ரப்பு உங்களின் மனைவி கதீஜாவுக்கு அவன் வகையில் சலாம் சொல்லச் சொன்னான், மேலும் சுவனத்தைக் கொண்டு சுபச் செய்தி சொன்னான்.. எனச் சொல்லக் கேட்ட அண்ணல் ﷺ, புல்லரித்துப் புளகாங்கிதம் அடைந்தார்கள்.

அதைக் கேட்டு தாயார் கதீஜா (ரழி) அடைந்த பேரானந்தத்திற்கு அளவே இல்லை.

என்ன ஒரு நிகழ்வு…!
ரப்புல் ஆலமீனான الله, தனது அடிமைக்கு சலாம் சொல்லி கண்ணியம் செய்தது அந்தத் தாய்க்குத் தான்.

இந்த துன்யாவின் புனிதமான ஒரு தாய் அல்லவா அவர்…,

எம் தாய் உம்முல் முஃமினீன் கதீஜா ரழியல்லாஹு அன்ஹா…

போற்றுதலுக்குரிய பொக்கிஷத்தைப் பற்றி பேச வேண்டிய காலம் இது…

இறை நாட்டமிருந்தால் தொடரலாம்…

 

இஸ்லாமிய வரலாற்றில் பைத்துல் முகத்தஸ்

*இஸ்லாமிய வரலாற்றில்*

49206670_1002134973315655_7797687583164596224_n

ரபீயூல் ஆகிர் 2⃣5⃣

*بيت المقدس*

فتحها عمر رضي

وحررها صلاح الدين ايوبي رح

فمن لها الان؟

*பைத்துல் முகத்தஸ்*

*அதை உமர் ரலி வெற்றி கொண்டார்கள்.*

*ஸலாஹுதீன் அய்யூபி ரஹ் மீட்டெடுத்தார்கள்.*

*இப்பொழுது அதை மீட்கப் போவது யார்?*

*ஹிஜ்ரி 583- ம் வருடம் ரபீயுல் ஆகிர் 25-ம் நாள் ஸலாஹுதீன் அய்யூபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தலைமையில் முஸ்லிம்கள் பைத்துல் முகத்தஸை மீட்டெடுத்தனர்.*

*உமர் ரலியல்லாஹு அன்ஹு பைத்துல் முகத்தஸை வெற்றி கொள்ளுதல்:*

கி.பி. 636 ஆம் ஆண்டு இரண்டாம் கலிபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் தளபதி காலித் இப்னு வலிது (ரலி) அவர்கள் தலைமையில் ரோமப் பேரரசின் பிடியில் சிக்கிச் சீரழிந்த ஜெருசலம் உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதி இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது. அங்கு வசித்த கிறிஸ்துவர்களும், யூதர்களும் பகைமையை விட்டு விட்டு சுதந்திர காற்றை சுவாசித்தனர். கிருத்துவத் திருசபை ஒன்று கூடி கலிபா உமர் (ரலி) அவர்களை கம்பளம் விரித்து வரவேற்றனர். ஆனால் ரோமப் பேரரசும், ஐரோப்பிய உலகமும் வெறி பிடித்துக் கதறியது, பழிவாங்க காத்திருந்தனர். ஒன்றல்ல… இரண்டல்ல…. சுமார் 450 ஆண்டுகள் கடந்தன..!

*இஸ்லாமியர்கள் பைத்துல் முகத்தஸை இழந்தனர்:*

11ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்களுக்கு மத்தியில் விரோதமும், குரோதமும் தலைக்கேரியதன் காரணமாக சக முஸ்லிமை அழிக்க ஐரோப்பிய திருச்சபைக்கு சிலர் அழைப்பு விடுத்து மாபெரும் பிழையை செய்தனர். இந்த வாய்பை பயன்படுத்திய அவர்கள் தங்களுடைய 450 வருட பழியை தீர்த்து ஜெருசலத்தை மீட்க களத்தில் இறங்கினர். சிலுவை போர் என்ற பெயரில் அழைப்பு விடுத்து ஜெருசலத்தை நோக்கி வந்தனர். வரும் வழியில் கண்ணில் கிடைக்கும் முஸ்லிம்கள், பள்ளிவாசல்கள் என அனைத்தையும் அழிந்தனர். சரியாக 450 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்லாமியர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிளவின் காரணமாகவும் மார்க்கத்தை சரியாக பேணாததின் விளைவின் காரணாமாக 1095 ஆம் ஆண்டு நமது (முஸ்லிகளின்) முதல் கிப்லா அவர்களின் கையில் சென்றது.

*பைத்துல் முகத்தஸை மீட்டெடுக்க புறப்பட்டு வந்த மாவீரன்:*

முதல் கிப்லாவை இழந்த உலக முஸ்லிம் சமூகம் தனது நிலையை எண்ணி வருந்தியது, இழந்த நிலத்தையும், இறையில்லத்தையும் மீட்டிட 40, 50 ஆண்டுகளாக தொடந்து சிறு சிறு போர்கள் செய்துக்கொண்டு இருந்தனர். ஈராக்கின் “சதாம் ஹுசைன்” பிறந்த அதே ஊரில் சரியாக கி.பி 1137ஆம் ஆண்டு பிறந்த ஒருவர் தனது இளம் பருவத்தில் சிலுவை படையினருக்கு எதிரான இராணுவத்தில் ஒரு சாதாரண வீரராக சேர்த்து அத்துடன் சிரியாவின் உயர்தரமான மதரஸாவில் மார்க்கக் கல்வியோடு, வரலாறு, சட்டம், அரபு மொழி என பல துறையில் அறிவோடு விளங்கியதன் விளைவாக சாதாரண வீரன் என்ற நிலையிலிருந்து இராணுவ தளபதி என்ற நிலைக்கு உயந்தியது. ஜெருசலேத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற வீரமும், விவேகமும், பொறுமையும் இவரை மீண்டும் தளபதியிலிருந்து எகிப்தின் ஆளுனராக பதவி உயர்த்தியது. யார் அந்த மாவீரன்? “சலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்)”

பொறுப்புக்கு வந்த உடன் சூடான், ஈராக், எகிப்து, சிரியா உள்ளிட்ட பகுதிகளை ஒருக்கிணைத்து முஸ்லிகளை உச்சகட்டப் போருக்கு ஆயத்தம் செய்தார். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இராணுவத்துடன் தங்கி இராணுவ வீரர்களுக்கு நவீன ஆயுதங்கள் பயன்படுத்தும் முறை, ஜெருசலத்தின் வரலாறு, ஜெருசலத்தை மீட்க வேண்டிய கடமை மற்றும் ஷஹிதால் கிடைக்கும் அந்தஸ்தை பற்றியும் சொல்லி ஒரு வலுவான இராணுவ வீரர்களை உருவாக்கினார். சலாஹுத்தீன் அவர்கள் மிகப் பெரிய போருக்கு தயாராகிறார் என்பதை தெரித்து கொண்ட ஜெருசலமின் அரசன் “லுசிக்ணன்” என்பவன் முந்திக் கொண்டு சிரியா மீது தாக்குதல் கொடுக்க தயாரானான்.
சலாஹுத்தீன் அய்யூபி வீரர்தான். அதில் சந்தேகமில்லை. ஒட்டுமொத்த மத்திய ஆசியாவையும் கைப்பற்றுவதென்பதும் சாதாரண விஷயமில்லை. ஆனால் நமக்குத் தெரிந்த அலெக்சாண்டர் போலவோ, ஒளரங்கசீப் போலவோ மாவீரனாக இவரை சரித்திரம் ஓரிடத்திலும் சொல்லுவதில்லை. ஆனால், அன்றைய மத்திய ஆசியாவெங்கும் ஆண்டுகொண்டிருந்த மன்னர்களிடையே ‘சலாஹுத்தீன் அச்சம்’ என்பது ஒரு தவிர்க்கமுடியாத நோயாகப் பரவியிருந்தது இதன் அடிப்படைக் காரணமாகிறது.

*பைத்துல் முகத்தஸை ஸலாஹதீன் அய்யூபி ரஹ் மீட்டெடுத்தார்:*

கி.பி. 1187 ஜுலை மாதம் நான்காம் தேதி “டைபரியாஸ்” என்ற பகுதியில் இஸ்லாமிய இராணுவமும் லுசிக்ணன் இராணுவமும் மோதின. அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற வேண்டி களம் இறங்கிய இஸ்லாத்தின் போராளிகளுக்கு அல்லாஹ் மகத்தான வெற்றியை பரிசாக அளித்தான். கி.பி. 1095 பறிப்போன பைத்துல் முகத்தஸ் மாவீரன் சலாஹுத்தீன் அய்யூபி அவர்களின் முயற்சியால் கி.பி. 1187 மீண்டும் முஸ்லிகளின் கையில்வந்தது. இச்செய்தி ஐரோப்பிய உலகை உலுக்கியது, போப் அர்பன் III என்ற மத பீடத்தின் தலைவர் உட்பட பலர் மாரடைப்பால் இறந்தனர். கி.பி 1095 இல் சிலுவைப் படையினர் முஸ்லிம்களுக்கு செய்த கொடூரத்திற்கு எந்த பழிதீர்க்கும் நடவடிக்கையும் இல்லாமல் அங்கு வாழ்த்த கிறிஸ்துவர்களுக்கும், யூதர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

போரிட்ட சிலுவைப் படையினர்களுக்கு மட்டும் அபராதம் விதித்து அதையும் சலாஹுத்தீன் அய்யுபே செலுத்தி விட்டார். அது மட்டுமல்லாமல் அனைவரும் ஐரோப்பாவிற்கு செல்ல வாகன வசதியும் செய்துக்கொடுத்தார். வரலாற்றில் இப்படி ஒரு அரசனை பார்க்க இயலாது என்ற அளவுக்கு அல்லாஹ்வுடைய தீனையும், பெருமானாரின் போர் நெறிகளையும் கையாண்டார். இந்த நல்ல செயல்கள் தான் இவரை மாவீரன் சலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) என்ற நிலையை பெற்று தந்தது.

வாழ்விற்கு தேவையான அழகிய உபதேசங்கள்

49091410_2329217114029165_1020596714723082240_n

🌹🌹🌹வாழ்விற்கு தேவையான அழகிய உபதேசங்கள் 🌹🌹🌹

🌼வாழ்வில் பாதுகாக்கபட வேண்டியவை.

1.தொழுகையில் உள்ளத்தை பாதுகாத்து கொள்வீராக

2.பிறர் வீட்டில் பார்வையை பாதுகாத்து கொள்வீராக

3.மக்களுக்கு மத்தியில் பேசும்போது நாவை பாதுகாத்து கொள்வீராக.

4. சாப்பிடும்போது வயிற்றை பாதுகாத்து கொள்வீராக.

🌼மறக்க வேண்டிய இரு விடயங்கள்.

1. பிறர் நமக்கு செய்த அநியாயம்.

2. நாம் பிறர்க்கு செய்த உபகாரம்.

🌼மறக்கவே கூடாத இரு விடயங்கள்.

1. அல்லாஹ்வின் நினைவு -திக்ர்☪️

2. மரணம் (மவ்த்)⚰️

(லுக்மான் (அலை) அவர்களின் உபதேசங்களிலிருந்து)

மன ஆரோகியத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் -கோப்பு புத்தகம்

மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிகள் WhatsApp Image 2018-12-05 at 16.17.38

 

மனத்தளர்ச்சி அல்லது மனச்சோர்வு அல்லது உளச்சோர்வு

just_a_little_boy_by_zznzz-d4ijb9t-e1411706775708

அசனா இப்பத்

மனோதத்துவ வியலாளர்

புத்தளம் , இலங்கை

மனத்தளர்ச்சி அல்லது மனச்சோர்வு அல்லது உளச்சோர்வு (Depression) என்பது மன வெறுப்பு போன்ற ஒரு அசாதாரண மன நிலையைக் கொண்டிருத்தலாகும். இப்படியான மனநிலை கொண்ட மனிதர்கள் கவலையாக, குழப்பமாக, வெறுமையாக, உதவியற்றவர்களாக, எதிர்பார்ப்பற்றவர்களாக, மதிப்பற்றவர்களாக, குற்ற உணர்வுடையவர்களாக, எரிச்சலடைபவர்களாக, அமைதியற்றவர்களாக உணரத் தலைப்படுவர்.
இவர்கள் தாம் ஆர்வமுடன் செயற்பட்டு வந்த விடயங்களில் ஆர்வத்தை இழந்து தொழிற்படாது இருப்பர். அத்துடன் அதிக பசி அல்லது பசியின்மையை உணர்வார்கள். மேலும் அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மைக்கு உள்ளாவார்கள். விடயங்களையும் விபரங்களையும் நினைவில் நிறுத்த முடியாமை, உறுதியாகச் செயல்படவோ, முடிவுகளை எடுக்கவோ முடியாமை போன்ற நிலைக்கு ஆளாகி, தற்கொலை முயற்சிக்கும் தள்ளப்படுவர். இவற்றால் அதிகரித்த சோர்வை உணர்வதுடன், வலிகள், சமிபாட்டுத் தொகுதியில் பிரச்சனைகளை சந்திப்பர்.

மனத்தளர்ச்சி – விளக்கம்

மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா என்று கேட்டு வைத்தார் ஒரு கவிஞர். இந்த மனத்தளர்ச்சி என்னும் உணர்வை மனிதராகப் பிறந்த நாம் அனைவரும் ஏதாவது ஒரு கால கட்டத்தில் சில நாள் அல்லது சில கிழமைகள் நிச்சயமாக அனுபவிக்க வாய்ப்புள்ளது. ஆனால் தெளிந்த சுய உணர்வும் மனம் பற்றிய விழிப்புணர்வும் இல்லாத பல மனிதர்கள் இதை உடல் சோர்வு என்றே உணர்கின்றனர். உண்மையில் மனம், உடல் இரண்டுமே பாதிக்கப்படுகிறது. மனத்தளர்ச்சி என்பது ஒரு உணர்ச்சியே. அதை எதிர்மறையான உணர்ச்சி என்று சொல்லலாம்.

பரிணாம உயிர் வளர்ச்சியில் உயிர்களுக்கு ஒரு இடையூறு ஏற்படும்போது செய் அல்லது செத்து மடி என்ற பதட்டம் உருவாகிறது. விளைவாக போராடு என்ற செயல் வெளிப்பட வேண்டும். ஆனால் வினோதமாக மனிதகுல சமூக பரிணாம வளர்ச்சியில் மனத்தளர்ச்சி என்ற எதிர்மறை உணர்வு ஏற்படுகிறது. தலைக்கு மேல் வெள்ளம் போனபின் சாணென்ன, முழமென்ன என்ற சலிப்பும், சோர்வும், ஆற்றாமையும் ஏற்படுகிறது. இடையூறு ஏற்படும் போது, இயக்கமின்மை ஏற்பட்டால், எதிர்மறை உணர்வுகளே ஏற்படும். புயலடித்து ஓய்ந்த பூமிபோல மனதின் ஆற்றல் எல்லாம் செலவழிந்து போன பின் ஏற்படும் வறட்சியும், இயக்கமின்மையுமே மனத்தளர்ச்சிக்குக் காரணமென நம்பப்படுகிறது.

அதுமட்டுமல்ல சிலர் போரிலிருந்து பின்வாங்கி போராடாமலிருப்பது, வாரிசுகள் எழுச்சியுற்று இடையூறை முறியடிக்கும் வரை ஒரு பாதுகாக்கும் முறையெனவும் சொல்லப்படுகிறது. எப்படியிருந்தாலும் மனத்தளர்ச்சி நீடிக்கும் வரை பாதிக்கபட்டவரது பலவித செயல் திறன்பாடுகள் நிச்சயமாகத் தாக்கமடைகிறது. அதன் விளைவாகப் பல உடல்நல, குடும்பநல, சமூக நல பாதிப்புகள் ஏற்படுகிறது. மனத்தளர்ச்சி என்பதை விசை, மின்சார ஏற்றம் குறைந்த மின்கலத்தின் விளைவாக அந்த பொம்மையோ, உபகரணமோ எப்படிச் செயல்குறைந்து செயல்படுகிறதோ அதனுடன் ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளலாம்.

மனத்தளர்ச்சியின் அறிகுறிகள்
மனத்தளர்ச்சியின் அறிகுறிகளை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று மனநல அறிகுறிகள். மற்றது உடல்நல அறிகுறிகள். பெரும்பாலும் மத்ய வயது, விபரம் புரிந்த, கல்வி அறிவுள்ள, நகர்ப்புற ஆண்களுக்கே இவ்வகைப் பாதிப்பு அதிகமாக உள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது(சான்று தேவை).

மனம் உற்சாகமாக இருக்க அடிப்படையாக மூன்று விதமான நம்பிக்கைகள் தேவைப்படுகின்றன. இவை தான் என்ற தன்னம்பிக்கை, அன்பு என்ற உறவுப்பிடிப்பு, எதிர்காலம் என்ற நம்பிக்கை ஆகும். நமது வாழ்க்கை மேல் உள்ள ஈடுபாடு, ஆர்வம் இந்த மூன்றிலும் இருக்கின்றது. முதலில் நான், தான் என்ற கடந்தகாலம், சாதனைகள், இனிய நினைவுகள் போன்றவை நம்மை உற்சாகப்படுத்துகின்றன. ஆனால் மனத்தளர்ச்சி ஏற்படும்போது நான் எதையும் சாதிக்கவில்லை, நான் உபயோகமில்லாதவன், நான் தாழ்வானவன், எனது இறந்த காலம் துயரமானது என்ற தாழ்வு மனப்பான்மையும், அவநம்பிக்கையும் ஏற்படுகிறது. அப்போது முதலிருந்த மனநிலையில் இருந்து விலகல் ஏற்படுகின்றது. இரண்டாவதாக பெற்றோர், உறவினர், குழந்தைகள், நண்பர்கள், சமூகத்தினர் யாராவது நம்மிடம் அன்பு பாராட்டி உதவிகள் செய்வார்கள் என்ற நிகழ்கால நம்பிக்கை துணைக்கு வருகின்றது. இதிலும் நான் ஆதரவற்றவன், எனக்கு யாருமில்லை என்ற அவநம்பிக்கை ஏற்படும்போது, எனக்கும் ஒரு எதிர்காலம் உண்டு நான் வாழ்வேன் என்ற எண்ணமும், இறை நம்பிக்கையும் தொடர்ந்து தளராமல் உழைக்கத் தூண்டுகிறது. ஆனால் நாளை நமக்கில்லை என்ற நிலை ஏற்படுமாயின், மூன்றாவது பாதுகாப்பிலிருந்தும் நழுவி விடுகின்றது. இதனால் குழப்பம், மயக்கம், கலக்கம், சஞ்சலம், துக்கம், சலிப்பு, களைப்பு, தவிப்பு, தனிமை, விரக்தி, வேதனை, அழுகை, ஆங்காரம் போன்ற பல எதிர்மறை உணர்ச்சிகள் உருவாகின்றன. விளைவாகப் பலருக்கு இயக்கமின்மை, கவனமின்மை, உற்சாகமின்மை, தெம்பின்மை, சிந்தனையின்மை, தெளிவின்மை, தீர்மானமின்மை, தன்னம்பிக்கையின்மை, ஆர்வமின்மை, உணர்ச்சியின்மை, பாசமின்மை, மகிழ்ச்சியின்மை, பொழுதுபோக்கின்மை ஏற்படுகிறது. இதனால் குற்ற உணர்வு, சுயவெறுப்பு மற்றவர் மேல் வெறுப்பு ஏற்படுகிறது.

மனத்தளர்ச்சியினால் ஏற்படும் நோய்கள்
மனநோய் நோய்க்கூட்டறிகுறி
இப்படியான மனத்தளர்ச்சி நிலமை இரண்டு கிழமைகளுக்கு மேலாகவும், எந்த ஒரு விடயத்திலுமோ ஆர்வமற்று, மகிழ்ச்சியற்று இருப்பார்களாயின், அந்நிலையை பெரும் மனத்தளர்ச்சிச் சீர்குலைவு (MDD – Major Depressive Disorder) என அழைப்பர். அமெரிக்காவில், பெரும் மனத்தளர்ச்சிச் சீர்குலைவுள்ளவர்களில் 3.4% மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதாகவும், தற்கொலை செய்துகொள்ளும் மனிதர்களில் 60% மானவர்களுக்கு மனத்தளர்ச்சியோ அல்லது வேறு உணர்ச்சிகள் தொடர்பான கோளாறோ இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது
இந்த மனத்தளர்ச்சி தொடர்ந்து இருந்து நாட்பட்ட நிலையை அடையினும், பெரும் மனத்தளர்ச்சிச் சீர்குலைவு நோயினளவு தீவிரமான அறிகுறிகளைக் கொண்டிராமல் இருப்பின் அது Dysthymia நோய் எனப்படும்.
இருமுனை மனச்சீர்குலைவு (bipolar disorder) என்னும் நோயை உடையவர்களும், ஓரளவு பெரும் மனத்தளர்ச்சிச் சீர்குலைவு நோய்க்குரிய அனுபவத்தைக் கொண்டிருப்பர்.
மனநோயல்லாத நிலை
சில தொற்றுநோய்களாலும், சில மனநிலை தொடர்பான பிரச்சனைகளாலும் இப்படியான மனத்தளர்ச்சி ஏற்படலாம். தைராய்டு சுரப்புக் குறை நோயின் ஆரம்ப அறிகுறியாகவும் இவ்வாறான மனத்தளர்ச்சி காணப்படும். இரு வேறுபட்ட வைரசினால் ஏற்படக்கூடிய Mononucleosis என்னும் நோயும், இவ்வகையான மனத்தளர்ச்சியை ஏற்படுத்தும்.

பெண்கள் மத்தியில் சர்ச்சைக்கு உள்ளாக்கப்படும் ஜில்பாப் !

cadar-1

முஹம்மத் ஜுபைர் அல்புஹாரி

 

அஸ்ஸலாமு அலா மனித்தப்ப அல் ஹுதா

சத்தியத்தை பின்பற்றுபவர்கள் மீது சாந்தியும் சமாதானமும்

உண்டாகட்டுமாக ஆமீன் …

சில தினத்திற்கு முன் பெண்கள் முகத்தை மறைக்க கூடாது என்ற தலைப்பில் ஒரு வாட்ஸ்அப் பதிவை அனுப்பி இருந்தார்கள் .பல ஹதீஸ்கள் குர்ஆனுடைய வசனங்கள் இட்டு ஒரு பெரிய  ஆய்வாக அந்த கட்டுரை இருந்தது அல்ஹம்துலில்லாஹ்.  மேலும் அது இணையத்திலிருந்து எடுக்கபட்டது என்பதையும் நான் அறிவேன். ஆனால் அதில் ஒன்று கூட சஹாபாக்கள் கருத்தோ ,இமாம்கள் கருத்தோ இடம்பெறவில்லை என்பதே வருத்தம்.

ஏனெனில் சகாபாக்கள் இமாம்கள்  இல்லாமல் இந்த மார்க்கம் நம் கையில் வந்து சேரவில்லை , ஏனெனில் இந்த மார்க்கம் நபிகளிடமிருந்து சகாபாக்கள் அவர்களிடமிருந்து தாபியீன்கள் ,தபா தாபியீன்கள் போன்றோர்கள் மூலமாக ஒரு சங்கிலி தொடராக இந்த மார்க்கம் பாதுகாக்கப்பட்டு நம்மிடம் ஒரு அமானத்தாக வந்துள்ளது .

இமாம்கள் ஒவ்வொரு ஹதீசையும் பல சிரமப்பட்டு நமக்காக பல மையில்கள் பயணம் செய்து இந்த ஹதீஸ்களை தொகுத்து இந்த ஹதீஸ்களை தவறாக இந்த உம்மத் புரிய கூடாது என்பதற்காக ஒவ்வொரு ஹதீசுக்கும் இமாம்கள் அதன் விளக்கம் இதுதான்… என ஒவ்வொரு ஹதீஸ்களையும் இந்த உம்மத்திற்கு கவனமாக தொகுத்து கொடுத்துள்ளனர். குறிப்பாக புகாரி இமாம் பற்றி பார்க்கையில் அவர்கள் சேகரித்த மொத்த ஹதீஸ்களில் இந்த மக்களுக்கு குழப்பம் வர கூடாது என்பதற்காக பல ஹதீஸ்களை நீக்கி அதில்  மொத்தமாக 7275 ஹதீஸ்கள் இமாம் அவர்கள் கோர்வை செய்திருந்த போதிலும், 4000 ஹதீஸ்கள் மீண்டும் மீண்டும் வராமல் ஒரு தடவை மாத்திரம் பதியப்பட்டிருக்கின்றது. இந்த ‘ஸஹீஹுல் புஹாரீ‘ கிரந்தம்தான் இன்று எம்மத்தியில் பாராயணம் செய்யப்படும், அறபு மதரஸாக்களின் பாடவிதானத்தில் ஹதீஸ் கலைக்காக வேண்டி சேர்க்கப்பட்டும், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பழம்பெரும் உஸ்தாதுமார்களினால் ஒருவருட பாடத்திட்டமாக ஏற்படுத்தி ‘ஸஹீஹுல் புஹாரீ‘ இல் உள்ள ஹதீஸ்களுக்கு விளக்கங்கள் போதிக்கப்பட்டும் வருகின்றன

 

இந்த பொக்கிஷங்களை நாம் நம் அடுத்த தலைமுறைக்கு  பாதுகாத்து  கொடுக்க வேண்டும் என்ற மிகப்பெரிய பொறுப்பு நம்மிடம் உள்ளது .ஏனெனில் அறிவை முன்னிறுத்தி அழிந்த கூட்டங்கள் பல முஹ்தஜிலா , ஹவாரிஜா போன்றவை இன்னும் அதுபோன்ற கூட்டங்கள் அறிவுக்கு பொருந்தாதது மார்க்கத்தில் இல்லை என பல சஹீஹான ஹதீஸ்களை வாய் கூசாமல் மறுத்து விடுகின்றனர் அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி அளிக்கட்டும் ,

 

இங்கு நான் விவாதிக்க இந்த பதிவு இல்லை சத்தியத்தை தேடுபவர்களுக்கான பதிவு ,ஏனெனில் விவாதிப்பவர்கள் ஆதாரத்தை மட்டுமே கேட்பார்கள் ஆனால் சத்தியத்தை உணர மாட்டார்கள் .

இங்கு ஒரு அரபி ஆய்வு கட்டுரை ஒன்றை  மூலமாக கொண்டு இந்த கட்டுரை மொழிபெயர்க்கபட்டுள்ளது, அந்த கட்டுரை முகத்தை மூடுவது வாஜிப் என்று குர்ஆன் ஹதீஸ்  அடிப்படையில் எழுதபட்டுள்ளது.

அதன் சுருக்கமான  தமிழாக்கத்தை இங்கு பதிகிறேன்.

இரு தரப்பினர் ஒன்று முகத்தை மூடுவது கட்டாயம் மற்றொன்று முகத்தைமூடவது கூடாது .இருவரும் பல ஆதாரங்களை தருகின்றனர் . இரண்டும் உண்மையான ஆதாரங்கள் தான் .ஆனால் அவைகளில் நம் சமூகத்திற்கு தேவை , இக்கால சூழலில் எது அவசியம் என்ற கேள்வி எழும்போது ,முகத்தை மூடுவது தான் நமக்கு சிறந்தது என ஆலிம்களும் , உலமாக்கள் சபை போன்றவைகள் வலியுறுத்துகின்றனர்.

அல்லாஹ் குர்ஆனில் சூரத்துன் நூர் 30 வசனத்தில்

 قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْؕ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَـعُوْنَ‏

(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.

 

அதேபோல் அதற்க்கு அடுத்த வசனமாவது பெண்களுக்கு பர்தா கடமையாக்கப்பட்ட வசனம்

” وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوْ التَّابِعِينَ غَيْرِ أُوْلِي الْإِرْبَةِ مِنْ الرِّجَالِ أَوْ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَى عَوْرَاتِ النِّسَاءِ وَلا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ” سورة النور 31‏

. இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.

 

இந்த இரண்டாவது வசனமே இருதரப்பிற்கும் ஆதாரமாக கொடுக்கபடுகிறது. முஹ்மினான ஆண் பார்வையை தாழ்த்தி கொள்வான் , முஹ்மீனான பெண் பார்வையை தாழ்த்தி கொள்வாள் ,ஆனால் இந்த காபிர்கள் எப்படி பார்வையை தாழ்த்துவார்கள் ??? அதற்கு தான் இந்த பெண்களுக்கான பர்தாவுடைய சட்டம் அவர்களை அலங்காரத்தை எல்லாருக்கும் வெளிக்காட்ட வேண்டாம் என சிலரை மட்டும் விதிவிலக்காக்கி விவரிக்கிறது.

நம் சமூக பெண்களை காபிரான ஆண்களிடமிருந்து காப்பாற்ற வேண்டிய மிக பெரிய பொறுப்பில் உள்ளோம் , நம் நாட்டு சூழலில் மாற்றுமதத்தவர்களுடனான திருமணங்கள் சமீபமாக கேரளாவில் அதிகம் இது நடைபெறுகிறது . அதில் ஒரு வீடியோ வாட்ஸ்அப்பில் வலம் வந்தது

ஒரு மாற்று மத ஆணுன் நீதிமன்றத்தில் வைத்து திருமணம் செய்து அந்த ஆணுடன் போகிற பெண்ணின் கால்களில் விழுந்து கதறும் தாய் , உதறிவிட்டு கல் நெஞ்சத்துடன் சென்ற பெண் இரு நாட்களில் பிணமாக கண்டெடுக்க படுகிறாள். இதில் யாரை குறை சொல்வது நமது இந்திய மற்றும் இலங்கை நாட்டு சூழல் பெருபான்மை சமூகம் இஸ்லாம் அல்லாதவர்கள் அவர்களை சுற்றியே நாம் வாழ்கிறோம் அப்படி இருக்கையில் நம் பிள்ளைகளை பாதுகாக்க பேணுதலா மார்க்கத்தைவூட்டி வளர்ப்பது அவசியம்.

நமது பெண்களில் வெட்க உணர்வை போக்குவதற்கான நாச வேலைகளை காபிர்கள் தான் செய்கிறார்கள் என்றால் நாமும் அதற்க்கு உதவ கூடாது .

 

நாம் முகத்தை மூட கூடாது என்ற வாதம் செய்தால் முகத்தை மூடக்கூடிய பெண்களும், உங்களால் அவர்களின் பேணுதல் பாதிக்க பட்டு அவைகளும் நிகாப்பை  களையும் போது அதன் பாவமும் நம்மை வந்தடையும்.

உங்களுக்கு அந்த சட்டம் தேவை இல்லை எனில் அமல் செய்யாதீர் ,ஆனால் அமல் செய்பவர்களை தடுக்கும் அதிகாரத்தை யார் உங்களுக்கு அளித்தது?

இந்த மார்க்கம் அல்லாஹுவும் அவனது ரசூலும் சொன்னது தானே தவிர நீங்களும் நானும் சொல்வது அல்ல…!

யாராவது நான்கு தமிழ் புத்தகங்களை வாங்கி படித்துவிட்டு நான் தீனை படித்து விட்டேன், நான் சொல்வது தான் மார்க்கம் என்று வந்து வாதம் செய்வார்கள் அதுபோன்ற மடையர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள் .

முடிந்தமட்டில் அரபி வழி கல்வியை படியுங்கள் குர்ஆனையும், ஹதீசையும் விளங்குவதற்காக, ஏனெனில் நபிகளாரின் மொழி அரபி , அல்லாஹுடைய வேதம் அரபியில் இறங்கபட்டுள்ளது, சுவன வாசிகளின் மொழி அரபி ஆகும் ,

மேலும் பல ஆயிரகணக்கான மார்க்க விளக்கங்கள் தப்சீர் , ஹதீஸ்களுக்கான விளக்கங்கள் அனைத்தும் அரபியில் தான் தான் கிடைக்கபெருகிறது , சஹாபாக்கள் மற்றும் இமாம்கள் கூறிய குர்ஆன் ஹதீஸின் விளக்கங்களை நாம் நாமே படித்து விளங்கி கொண்டால்

நாம் வழிகெட்ட கூட்டங்களின் வழிகேட்டில் இருந்து தப்பிக்கலாம் .

 

முகத்தை மூடுவது வாஜிப் என்பதற்கு  ஆதாரங்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வாயிலாக தரபடுகிறது மேலும் கியாஸ் அடிப்படையில் விளக்கங்களும் தரபட்டுள்ளது.

 

“முஸ்லிம்களே அறிந்துகொள்ளுங்கள் அந்நிய ஆடவர்களிடமிருந்து முஸ்லிமான பெண்கள் தங்களின் முகத்தை மறைப்பது வாஜிப் ஆகும் .

முதல் ஆதாரம் குர்ஆனிலிருந்து …

قال الله تعالى : ” وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوْ التَّابِعِينَ غَيْرِ أُوْلِي الْإِرْبَةِ مِنْ الرِّجَالِ أَوْ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَى عَوْرَاتِ النِّسَاءِ وَلا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ” سورة النور / 31

முகத்தை மறைப்பது வாஜிப் என்பதை இந்த வசனத்திலிருந்து விளங்குவது

பின்வருமாறு ..

  • அல்லாஹ் பெண்களை தங்களின் அலங்காரத்தை வெளிக்காட்ட வேண்டாம் ,அவைகளில் இருந்து சாதாரணமாக வெளிபடுவதை தவிர إلا ماظهر منها என்ற வார்த்தையை பயன்படுத்துகிறானே தவிற أظهرن منها ـ என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை அதாவது “அவர்களிடமிருந்து வெளிபடுவதை தவிர “ என அல்லாஹ் பயன்படுத்தவில்லை .மேலும் சில சலபிகள் கூறுகையில் இங்கு மஸ்வூத் ,ஹசன் (ரலி) அல்லாமா இப்னு சீரீன் (ரஹ்) போன்றோர்கள் கூறுகையில் அல்லாஹ் அவைகளிடமிருந்து வெளிபடுவதை தவிர என்பது –ஆடையின் ஓரங்களை குறிபிடுகிறான்.

(கை மணிக்கட்டு பகுதி , பாதம் )

 

பிறகு அலங்காரத்தை இருமுறை குறிபிடுகிறான் முதலாவது அலங்காரத்தை  வெளிபடுத்த வேண்டாம் என்றும், இரண்டாவது வெளிபடுத்த அனுமதித்து சிலருக்கான விதிவிலக்கை குறிபிடுகின்றான்.

இங்கு நீங்கள் பார்க்க வேண்டியது மிக துல்லியமாக கூறலாம் .

 

அலங்காரத்தை வெளிபடுத்த கூடாதவர்கள் – அந்நிய ஆண்கள்

அலங்காரத்தை வெளிபடுத்த அனுமதிக்க பட்டவர்கள் – இறைவன் குறிபட்ட சிலர் மட்டுமே . இங்கு அலங்காரம் என்பதற்கு கண்டிப்பாக நேரடி பொருள் முகத்தை மறைத்தல் என்பதே ஆகும் , அதை தவிர வேறு எதை பொருள் கொண்டாலும் துல்லியமான பொருள் வராது .

 

ஏனெனில் அலங்காரத்தை பார்க்க அனுமதிக்க பட்டதில் இச்சை ஏற்படாத சிறுவர்கள், இச்சை வெளிபடுத்த முடியாத முதியவர்கள் என கூறுகளில் அவர்களிடம் வெளிப்படுத்த அனுமதி கூறபடுவது முகமே தான் .

மேலும் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள். அல்லாஹுத்தஆலா வின் மீது சத்தியமாக முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக சூரத்துன் நூரிலே அல்லாஹுத்தஆலா ஹிஜாபுடைய ஆயத்தை இறக்கியவுடன் அவர்களின் மேலதிகமான ஆடைகளைக் கிழித்து அதைக் கொண்டு தங்கள் முகத்தை மூடிக் கொண்டார்கள். (புஹாரி 4578)

 

இந்த சட்டத்தின் நோக்கம் பெண்களின் பித்னாவிற்கு பயந்து அவர்களின் அவர்களினால் இச்சை ஏற்பட கூடும் என்பதால் , முகம்தான் மொத்த அழகின் வெளிபடுத்தும் , பித்னாவை ஏற்படுத்தும் எனவே முகத்தை மறைப்பது வாஜிப் என்பதில் சந்தேகமில்லை,

 

  • மேலும் அல்லாஹ் கூறிகிறான் : ( ولا يضربن بأرجلهن ليُعلم ما يُخفين من زينتهن ) “தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்;” இதன் விளக்கமாவது சலங்கை போன்ற அணிகலன்களை அணிந்து கால்களை அடித்து நடப்பதால் அவர்களின் அலங்காரத்தை அறிய தூண்டபடுகிறார்கள்.அவர்களின் முகம் எப்படி இருக்கும் அழகானவர்களாக இருப்பார்களா என என்று பித்னா தோன்றும் .

 

  • இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ரஸூல் (ஸல்) அவர்கள்

சொன்னார்கள். “பெண் என்றாலே அவரத்து தான் (அதாவது முழுமையாக மறைக்க பட வேண்டியவள் தான்). அவள் (வீட்டை விட்டு) வெளியானால் ஷைத்தான் அவளை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்து விடுகிறான். அந்த பெண் தனது ரப்புடைய ரஹ்மத்திற்கு மிக நேருக்க மாக இருப்பதெல்லாம், அவளோ வீட்டின் மறைவான உட்பகுதியில் இருக்கும் போதுதான்.

(ஆதாரம் : திர்மிதி 1173, இப்னு ஹிப்பான் 7:446 – 5570, இப்னு குஸைமா –

1686, 1687, தபரானி – 10:122 – 10115)

 

ஆதாரம் இரண்டு :

قوله تعالى : ( وَالْقَوَاعِدُ مِنْ النِّسَاءِ اللاتِي لا يَرْجُونَ نِكَاحًا فَلَيْسَ عَلَيْهِنَّ جُنَاحٌ أَنْ يَضَعْنَ ثِيَابَهُنَّ غَيْرَ مُتَبَرِّجَاتٍ بِزِينَةٍ وَأَنْ يَسْتَعْفِفْنَ خَيْرٌ لَهُنَّ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ ) سورة النور / 60

 

மேலும், பெண்களில் விவாகத்தை நாட முடியாத (முதிர்ந்து) வயதை அடைந்து விட்ட பெண்கள், தங்கள் அழகலங்காரத்தை(ப் பிறருக்கு) வெளியாக்காதவர்களான நிலையில், தங்கள் மேலாடைகளைக் கழற்றியிருப்பது, அவர்கள் மீது குற்றமில்லை; ஆனால் (இதனையும் அவர்கள் தவிர்த்து) ஒழுங்கைப் பேணிக்கொள்வது அவர்களுக்கு மிகவும் நலமாக இருக்கும். அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.

இதன் விளக்கமாவது திருமணத்தை நாட முடியாத பெண்கள் தங்கள் அலங்காரத்தை வெளிபடுத்தி அவர்களின் முக்காடை கழட்டி இருப்பது அதாவது முகத்தை மூடாமல் இருப்பது ஆகுமானது , எனினும் அதிலும் பேணி முகத்தை மூடுவது நலம் என கூறப்பட்டுள்ளது. இங்கு முக்காடு போடாமல் என தலையை துறந்து கொள்ளுதல் என அர்த்தம் வைக்க முடியாது . தலையை துறந்து கொண்டு செல்பவர்கள் நம்மில் யாரும் இல்லை. எனவே இது முகத்தை மூடுவது குறித்தே கூறபட்டுள்ளது என சந்தேகத்திற்கிடமின்றி கூறபட்டுள்ளது.

 

மேலும் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள், அல்லாஹுத்தஆலா வின் வேதத்தை உண்மைப் படுத்துவதிலும் அவன் இறக்கி வைத்ததை ஈமான் கொள்வதிலும் அன்சாரிப் பெண்களை விட சிறந்தவர்களை நான் பார்த்ததில்லை. சூரத்துன் நூரிலே அல்லாஹுத்தஆலா அவர்களுடைய ஹிமார்களைக் கொண்டு அவர்களுடைய மார்புப் பகுதிகளின் மீது போட்டுக் கொள்ளட்டும் என்ற ஆயத்தை இறக்கி வைத்ததும் அவர்களின் ஆண்கள் அவ் வசனம் இறக்கிவைக்கப்பட்ட தை விரைந்து வந்து அப் பெண்களிடம் ஓதிக் காண்பித்தார்கள். அந்தப் பெண்கள் அனைவரும் தமது ஆடையின் பக்கம் எழுந்து சென்றார்கள் . பஜ்ருத் தொழுகையை நபியவர்களுக்குப் பின்னால் தலையையும் முகத்தையும் மூடியவர்களாகத் தொழுதார்கள். அவர்களுடைய தலைகள் மீது காகங்கள் குந்தியிருந்ததைப் போன்று இருந்தது.

(அபுதாவுத்32/4090)

 

மூன்றாவது ஆதாரம் …

قوله تعالى ( يَاأَيُّهَا النَّبِيُّ قُلْ لأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا ) الأحزاب / 59

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.

இமாம் இப்னு தைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பின் 22ழூ ழூ110 ல் சொல்கிறார்கள்.

மேற்கண்ட வசனத்தில் ‘ஜில்பாப்’ என அல்லாஹ் குறிப்பிடுவது ஒரு பெண் தன் தலை மற்றும் முழு உடலை யும் மறைத்துக் கொள்ளும் விதத்தில் அணியும் ஆடை என இப்னுமஸ்வுத் ரளியல்லாஹு அன்ஹு போன்றவர்கள் கூறியுள்ளார்கள். அவள் தன் கண்களைத் தவிர முழு உடலையும் மறைத்துக் கொள்ளும் விதத்திலான ஆடையை அணிவது என அபுஉபைதா போன்றோர் கூறுகின்றனர்.

 

இப்னு அப்பாஸ் (ரலி ) கூறுவதாவது “ அல்லாஹ் முஹ்மீனான பெண்களுக்கு கட்டளையிருகிறான் நீங்கள் தேவையை நிறைவேற்ற வெளியே சென்றால் உங்கள் தலை முந்தானையால் முகத்தை மூடிகொள்ளட்டும் என்றே கூறுகிறான் .

 

 

நான்காவது ஆதாரம்

قوله تعالى : ( لا جُنَاحَ عَلَيْهِنَّ فِي آبَائِهِنَّ وَلا أَبْنَائِهِنَّ وَلا إِخْوَانِهِنَّ وَلا أَبْنَاءِ إِخْوَانِهِنَّ وَلا أَبْنَاءِ أَخَوَاتِهِنَّ وَلا نِسَائِهِنَّ وَلا مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ وَاتَّقِينَ اللَّهَ إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدًا ) الأحزاب / 55 .

(நபியின் மனைவிமார்களாகிய) அவர்கள், தங்களுடைய தந்தையர் முன்பும், தங்கள் ஆண் மக்கள் முன்பும் தங்கள் சகோதரர்கள் முன்பும், தங்கள் சகோதரர்களின் ஆண்மக்கள் முன்பும், தங்கள் சகோதரிகளின் ஆண்மக்கள் முன்பும், அவர்களின் பெண்கள் முன்பும்; அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் முன்பும் (வருவது) அவர்கள் மீது குற்றமாகாது; எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; (நபியின் மனைவிமார்களே!) நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கின்றான்.

 

قال ابن كثير رحمه الله : لما أمر الله النساء بالحجاب عن الأجانب بين أن هؤلاء الأقارب لا يجب الاحتجاب عنهم كما استثناهم في سورة النور عند قوله تعالى : ” ولايبدين زينتهن إلا لبعولتهن ”

இப்னு கஸீர் (ரஹ் ) இந்த வசனத்திற்கு கருத்தாக கூறுவது : அல்லாஹ் இந்த வசனத்தில் திரை எற்படுத்திகொள்ள அவசியமில்லை என உறவினர்களுக்கு அனுமதி அளிப்பது சூரத்துன் நூரில் அனுமதித்தது போல தான் என்கிறார்கள்.அதாவது அலங்காரத்தை வெளிபடுத்தலாம் சில உறவுகளிடம் வெளிபடுத்தலாம் என்பதும் , திரை தேவை இல்லை என்பதும் ஒரே பொருள் தான் என்கிறார்கள் .

ஹதீஸ் அடிப்படையில் முகத்தை மூடுதல்

முதலாவது

 

قوله صلى الله عليه وسلم : ” إذا خطب أحدكم إمرأة فلا جناح عليه أن ينظر منها إذا كان إنما ينظر إليها لخطبة وإن كانت لاتعلم ” رواه أحمد . .

நபிகளார் கூறினார்கள் “ உங்களில் ஒருவருக்கு பெண்ணை திருமணதிற்கு நிச்சயிக்கபட்டால் அவர்களை பார்ப்பதில் எந்த எந்த குற்றமும்  இல்லை .(அஹமத் )

இந்த ஹதீஸ் பெண் திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட பட்ட பின் பார்த்தல் என்பது முகத்தை பார்த்தல்  என்றே விளங்குகிறது . வேறு பாகங்களை பார்க்க அனுமதி இல்லை என்பது நாம் அறிந்ததே . அந்நிய பெண்ணை பார்ப்பது குற்றம் எனவே இந்த ஹதீஸில் திருமனத்திற்கு உறுதியான ஆண் பார்ப்பதில் குற்றம் இல்லை என்கிறது .

அதற்க்கான ஹதீஸ்கள் பல திருமணம் பற்றிய பாடத்தில் விவரிக்கபட்டுளது.

ஆக அந்நிய ஆடவர்கள் பார்க்க அனுமதிக்க படாத பெண்ணை திருமணதிற்கு

உறுதி செய்யபட்ட ஆண் பார்க்க அனுதிக்கபட்டுள்ளது.

நபிகளார் காலத்தில் எல்லா பெண்களும் முகத்தை பார்க்க முடியும் என்றிருந்தால் இப்படி நபிகளார் கூற அவசியம் இருந்திருக்காது.

ماينظر إليه – அவளை பார்த்தல் என்பதற்கு முகத்தை கூறவில்லை என்றால் எதை பார்க்க அனுமதிக்கிறது என்ற மிக பெரிய கேள்வியை முன் வைப்பேன் ?

முகத்தை பார்க்கும் போது அவள் அழகானவளா என்பதை அறியும் பொருட்டு கூறபடுகிறது , மேலும் அவர்களிக்கிடையே அன்பு ஏற்படும் என்றே நபிமொழி கூறுகிறது .

இரண்டாவது

أن النبي صلى الله عليه وسلم لما أمر بإخراج النساء إلى مصلى العيد قلن يا رسول الله إحدنا لا يكون لها جلباب فقال النبي صلى الله عليه وسلم : ” لتلبسها أُختها من جلبابها ” . رواه البخاري ومسلم .

உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். பெருநாள் தொழுகை

தொளுமிடத்துக்கு பெண்களையும் அனுப்பும்படி நபியவர்கள் கூறிய பொழுது,

பெண்கள் கேட்டார்கள் “யா ரசூலல்லாஹ்! எங்களின் ஜில்பாப் இல்லாதவள்..?”

(என்ன செய்வது?). அதற்கு நபியவர்கள் சொன்னார்கள், “தன் சகோதரி அவளின் ஜில்பாபை அவர்களுக்கு உடுப்பட்டட்டும்”. (அதில் ஜில்பாப் என்று

வருகின்றது (ஆதாரம் : புகாரி – 351. முஸ்லிம் – 2056)

 

இந்த ஹதீஸ் சஹாபி பெண்மணிகள் தங்களின் ஜில்பாப் என்னும் முகத்திரை இல்லாமல் வெளியே வரமாட்டகள் என்பது தெளிவாகிறது ,

ஐந்தாவது ஆதாரம் ..

عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ الرُّكْبَانُ يَمُرُّونَ بِنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْرِمَاتٌ فَإِذَا حَاذَوْا بِنَا سَدَلَتْ إِحْدَانَا جِلْبَابَهَا مِنْ رَأْسِهَا عَلَى وَجْهِهَا فَإِذَا جَاوَزُونَا كَشَفْنَاهُ ” رواه أبو داوود (1562) .

”நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இஹ்ராம் அணிந்த நிலையில் இருக்கும்போது வாகனக் கூட்டம் ஒன்று எங்களைக் கடந்து செல்லும். எங்களுக்கு நேரே அவர்கள் வரும்போது எங்களில் உள்ள பெண்கள் தங்கள் தலை யில் தொங்கிக் கொண்டிருக்கும் துணியால் முகத்தை மறைத்துக் கொள்வார்கள். வாகனக் கூட்டம் எங்களைக் கடந்து சென்றதும் எங்கள் முகத்தைத் திறந்து கொள் வோம்”.

என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்.

 

(நூற்கள்: அஹ்மத் 1562 )

 

இங்கு ஜில்பாபை கொண்டு முகத்தை மறைத்து கொண்டோம் என்று ஆயிஷா (ரலி) அவர்களே கூறுகையில் ஜில்பாப் என்ற வார்த்தைக்கு தவறான அர்த்தம் கற்பிப்பது குற்றம் ஆகும்.

மேலும் ஒரு ஹதீஸில்

ஜில்பாப் என்றால் முகமூடி என்பது என்னுடைய சொந்த கருத்து இல்லை.மாறாக ஆயிஷா (ரழி) அவர்களின் கருத்து

 

புகாரியில் வரக்கூடிய ஆயிஷா (ரழி) அவர்களின் விடயத்தில்

இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் இதற்கு ஆதாரமாகும்.

 

அதில் அவர்களே சொல்கின்றார்கள்.

 

فبينا أنا جالسة في منزلي غلبتني عيني فنمت، وكان صفوان بن المعطل السلمي

ثم الذكواني من وراء الجيش فأدلج فأصبح عند منزلي، فرأى سواد إنسان نائم،

فأتاني فعرفني حين رآني، وكان يراني قبل الحجاب، فاستيقظت باسترجاعه حين

عرفني، فخمرت وجهي بجلبابي،

 

இதன் தமிழ் மொழி பெயர்ப்பு :-

 

ஸஃப்வான் இப்னு முஅத்தல் அஸ்ஸுலமீ அத் தக்வானீ என்பவர் அங்கு இருந்தார். நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் அவர் காலையில் வந்தார். அவர் (அங்கே) தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னை)ப் பார்த்தார்.

பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் அவர் என்னைப்

பார்த்திருந்தார். எனவே, என்னைப் பார்த்ததும் அவர் அடையாளம் புரிந்து

கொண்டார். அவர், என்னை அறிந்து கொண்டு, ‘இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண்

விழித்தேன். உடனே என்னுடைய முகத்திரையால் என் முகத்தை மறைத்துக்

கொண்டேன்.இதில் இந்த வார்த்தையை கவனியுங்கள் .

 

ஜில்பாப் என்றால் முகமூடி என்று அவர்களே சொல்கின்றார்கள்فخمرت وجهي بجلبابي – உடனேஎன்னுடைய முகத்திரையால் என் முகத்தை மறைத்துக் கொண்டேன்.

இது ஜில்பாப் என்றால் முகமூடி என்பதற்கான பலமான ஆதாரமாகும்.

(இதில் ஹிஜாப் என்றால் என்ன என்றும் தெளிவாகின்றது.

ஹிஜாப் என்றாலும் முகமூடிதான்.)

 

 

முகத்தை மூடவேண்டும் என்பதற்கான காரணிகள்

1 . பெண்களினால் ஆண்களுக்கு ஏற்படும் பசாத் என்னும் குழப்பத்தை தவிர்த்தல். ஏனெனில் பெண்கள் தன் முகத்தை அலங்கரித்து கொள்ளுதல் , தம்மை அழகுள்ளவள் என பிறர் கூற வேண்டும் என விரும்புதல் , தன்

அழகை ஆடவர்கள் பார்த்து வியக்கவேண்டும் என்ற பெருமை கொள்ளுதல் போன்ற பித்னாக்கள் உண்டாகும் …

2  பெண்களின் வெட்க உணர்வு போய்விடும் ..

ஏனெனில் வெட்கம் ஈமானின் ஒரு பகுதி என்பது நபி மொழியாகும்.

மேலும் மற்றொரு நபிமொழியாவது

الحياء والإيمان قرناء جميعا، فإذا رفع أحدهما رفع الآخر،

வெட்கமும் ஈமானும் இணை பிரியாதவை. இரண்டில் ஒன்று உயர்த்தப்படுமாயின் மற்றையதும் உயர்த்தப்படும்.” (அல்ஹாகிம் )

இந்த ஹதீஸ் வெட்க உணர்வின் முக்கியத்துவத்தை கூறுகிறது.

உண்மையில் மனிதனுக்கும், மிருகத்திற்கும் உள்ள வேறுபாட்டை பிரித்து காட்ட கூடியது வெட்க உணர்வே ஆகும் .

أشد حياءً من العذراء في خدرها

வெட்க உணர்வில் ஆக சிறந்தது பருவ பெண்ணின் வெட்கம் ஆகும் என்ற நபிமொழி காண கிடைக்கிறது .

சைத்தான் ஆதமின் மகனின் இரத்த நாளங்களில் ஓடி கொண்டிருக்கிறான் .

எப்போதும் நம்மை வழிகெடுக்கும் வேலைகளை தூண்டுகிறான்,

மேலும் இங்கு நாம் மலக்குகள் போல் படைக்கப்படவில்லை , இச்சை உணர்வுடன் படைக்க பட்ட மனிதன் என்பதை நினைவில் கொள்க .

3 ஆண் பெண் கலப்பை ரசூலுல்லாஹ் வெறுத்தார்கள் .அதனால் குழப்பம் ஏற்படும் பெண்களின் வெட்க உணர்வு போய்விடும் .

أخرج الترمذي (5272) عَنْ حَمْزَةَ بْنِ أَبِي أُسَيْدٍ الأَنْصَارِيِّ عَنْ أَبِيهِ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَهُوَ خَارِجٌ مِنْ الْمَسْجِدِ فَاخْتَلَطَ الرِّجَالُ مَعَ النِّسَاءِ فِي الطَّرِيقِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلنِّسَاءِ اسْتَأْخِرْنَ فَإِنَّهُ لَيْسَ لَكُنَّ أَنْ تَحْقُقْنَ الطَّرِيقَ ، عَلَيْكُنَّ بِحَافَّاتِ الطَّرِيقِ . فَكَانَتْ الْمَرْأَةُ تَلْتَصِقُ بِالْجِدَارِ حَتَّى إِنَّ ثَوْبَهَا لَيَتَعَلَّقُ بِالْجِدَارِ مِنْ لُصُوقِهَا بِهِ ” حسنه الألباني في صحيح الجامع ( 929 )

ஒருமுறை நபிகளார் பள்ளிவாசலில் இருந்து வெளியேறும்போது பாதையில் (தொழுதுவிட்டு சென்ற ) ஆண்கள் பெண்கள் கலந்து வெளியேறுவதை கண்ட நபிகளார் பெண்களை பார்த்து “நீங்கள் பாதைகளின் ஓரங்களை பற்றி பிடித்துகொள்ளுங்கள் “என்ற மாத்திரம் சஹாபி பெண்மணிகள் தங்கள் ஆடைகள் சுவர்களில் உரசும் அளவிற்கு சுவருக்கு மிக நெருக்கமாக நடந்து சென்றார்கள் என்பதை பார்க்கிறோம் .

 

இறுதியாக ஒரு விடயம் முகத்தை மூட கூடாது என்று தங்கள் சொன்ன கூட்டம்   இன்று விபசார வழக்குகளில் சிக்கி சீர்கெட்டு போய்விட்டனர் .

தங்களிடம் பிரச்சனைக்கு தீர்வுகேட்டு அல்லது மார்க்கம் கற்க வந்த பெண்களை தங்கள் இச்சைகளுக்கு தீனி ஆக்கிக்கொண்ட கூட்டத்தை தான்

நாம் பார்க்கிறோம் .

மேலும் இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் கொள்வது , நம் மார்க்க நடைமுறையை மாற்றுவதும் யூதர்களின் திட்டங்களில் உள்ளவை ஆகும்

அல்லாஹ்வே அனைத்திற்கும் போதுமானவன் .

 

நட்புடன்

முஹம்மத் ஜுபைர் சித்தீகி அல்புஹாரி

கட்டுமாவடி .

 

Arabic Article for Ref : https://islamqa.info/ar/11774

மேலும் எனது சில கட்டுரைகளை  படிக்க ..

இஸ்லாமிய இளைய சமூகமும், யூதர்களின் திட்டங்களும்

 

https://suvanapparavai.wordpress.com/2015/01/05/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF/

முஹ்தஸிலா கூட்டத்தின் தோற்றம் !

 

https://suvanapparavai.wordpress.com/2015/01/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B/

இமாம் புகாரி (ரஹ்) அவர்களின் ஹதீஸ் சேகரிப்பும் அதன் உண்மை தன்மையும்

 

https://suvanapparavai.wordpress.com/2015/01/14/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய ஹதீஸ்களின் தரம்

 

https://suvanapparavai.wordpress.com/2015/01/14/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B9/