Monthly Archives: ஏப்ரல் 2015

இஸ்லாம் 4 திருமணங்களை அனுமதித்தது ஏன் ?

women-in-islam

இஸ்லாம் மனித வாழ்விற்கான
ஒரு சிறந்த மார்க்கம் ,இதில் எந்த
சந்தேகமும் இல்லை.

இஸ்லாம் பலதாரமணத்தை ஆதரிக்கிறதே என சர்ச்சைகள்
அவ்வப்போது எழுவதை பார்க்கிறோம்.

உண்மையில் 4 திருமணம் என்பது
பல திருமணங்களை குறைப்பதற்காக இறைவன்
விதித்த கட்டுபாடு ஆகும். மாறாக
சலுகை அல்ல.
ஆம்! அரேபியர்களின் அறியாமைகால
(இஸ்லாத்திற்கு முன்) திருமணமுறை
பற்றி அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அரேபியர்களின் அறியாமைகால
திருமணம் பற்றி பிக்ஹ் சுன்னா
விவரிக்கிறது.
‪*‎ஒருபெண்‬ பருவமடைந்தால் அவளின் வீட்டில் ஒரு கொடி
பறக்கவிடப்படும் அதைகண்டு
ஆண்கள் அந்த வீட்டிற்கு சென்று
விடலாம். -வெளிபடையாக சொன்னால் விபச்சாரம் தான்.

‪*ஒருபெண்ணோடு‬ பலர் சேருவர்
அவளுக்கு பிறக்கும் குழந்தை யார்
சாயலில் உள்ளதோ அந்த ஆணோடு அவள் வாழவேண்டும்

‪*‎மஹர்‬ கொடுத்து திருமணம் முடிக்கும் இஸ்லாமிய முறையும்
இருந்தது.

இதுதான் அறியாமை கால சூழல்
உண்மையில் அப்போதைய காலத்தில் பெண்கள் வெறும்
போதைபொருளாகவே பார்க்கப்பட்டனர்.
மேலும் அக்காலகட்டத்தில் ஒரு
ஆண் 10 முதல் 15 திருமணம் வரை
செய்துகொண்டனர். இதை குறைக்கவே இஸ்லாம் 4 திருமணம் என்ற வரையறையை கொண்டு வந்தது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் ௮அறிவிக்கிறார்கள்.
கைலான் இப்னு சலமா அஸ்ஸகஃபி அவர்கள் இஸ்லாத்தில் இணையும்போது
10 அறியாமை காலத்தில் மணந்த
மனைவிகள் இருந்தார்கள். மேலும்
அந்த பெண்களும் அவரோடு
இஸ்லாத்தில் இணைந்தனர்
எனவே நபிஸல் அவர்கள் அந்த
பெண்களில் 4 பேரை தேர்தெடுக்க
கட்டளையிட்டார்கள்.

ஐந்தாவது திருமணம் செய்தால்
அதற்கு இஸ்லாம் கூறும்
தண்டணை:

நான்கு திருமணத்திற்கு மேல்
ஒருவர் திருமணம் செய்வது
இஸ்லாத்திற்கு மாற்றமான
குற்றமாகும் .
இமாம் மாலிக் (ரஹ்) மற்றும் இமாம்
ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது
ஐந்தாவது திருமணம் செய்தவனுக்கு கசையடி அடிக்க வேண்டும் . இமாம் ஜுஹ்ரி (ரஹ்)
அவர்கள் கூறுவதாவது
ஐந்தாவது திருமணம் செய்தவனை
கல்லால் அடிக்க வேண்டும்.

ஆகவே இஸ்லாம் திருமணத்தில்
சரியான ஒழுங்குமுறை கொண்டுவரவே 4 திருமணம் என்ற
கட்டுபாடை விதித்ததே
தவிர அதை ஊக்கிவிபதற்காக
அல்ல.
இந்திய கலாச்சார சூழலில் யாரும்
4 திருமணம் செய்து கொள்வதும்
இல்லை

நட்புடன்

முகமத் ஜுபைர் சித்தீகி அல்புகாரி

அபூ ஹுரைரா (ரலி) வரலாறும் அதன் படிப்பினைகளும்

aboo huraira rali

இந்த நபித்தோழரின் பெயரை கேட்டாலே ஹதீஸ்கள் தான்

ஞாபகம் வரும். அந்த அளவிற்கு ஹதீஸ் அறிவிப்பில் முதன்மையானநபிதோழர் ஆவார்கள் . இவரிடமிருந்து பல ஹதீஸ்களை பெற்றுள்ளோம்ஆனால் இவர்களின் வரலாறு  பற்றி அதிகம் யாரும் அறிந்திருக்கவில்லை .அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக காண்போம். இன்ஷா அல்லாஹ்  !

சுகபோக வாழ்வை தூசித்து சாதனையில் சாதித்து உயிர்துறக்க  முன்வந்த நபிதோழர்களில் இவர்களும் ஒருவராகும் .

தேசம் ; எமன் நாட்டை சேர்ந்தவர்கள் .

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் உண்மைத்தன்மை அறிந்துமதீனா வந்து தன்னை சத்திய இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்கள்.

இஸ்லாத்தில் இணையும் முன் இவருடைய பெயர் : அப்துஸ் சம்ஸ் (சூரியனின் அடிமை )

இஸ்லாத்தில் இணைந்த பின்பு நபிகளாரால் அப்துர்ரஹ்மான் என்று பெயரிடபட்டார். அதுமட்டுமல்ல குட்டிபூனையின் தந்தை என்று விளக்கமுற

அபூ ஹுரைரா (ரலி) என்று நபிகளார் புனைபெயரை சூட்டினார்கள் . மக்கள் மத்தியில் அபூ ஹுரைரா (ரலி) என்ற பெயரே

நிலையாக இருந்தது.

இளமை காலம் :

இவர்கள் இளைஞராக வாழும் காலகட்டத்தில் ஒரு செல்வ பெண்மணியிடம் பணியாளராக இருந்தார்கள் .
அந்த பெண்மணி வாகனத்தில் அமர்திருக்க இவர்கள் கால்களில் செருப்பின்றி பின்னால் ஓடி வருவார்கள். இவர்கள் ஆடுமாடு ஒட்டகமும்மேய்த்ததும் உண்டு . நல்லறிவை கற்பதில் முன்னிலை அடைந்த வண்ணம் இவர்கள் 5374 நபிமொழிகளை அறிவிக்கும் மேதையாகி அண்ணல் நபி (ஸல்)அவர்களின் பேரன்பின் பிரியராகி விட்டார்கள்.இத்தகைய மேன்மைகளை பெற்ற இவர்கள் மக்கள் அல்லாஹ்விடம் வேண்டும் துஆவிர்க்கும் புகழுக்கும்வாழ்த்துக்கும் உரியவாராகி விட்டார்கள்.

Continue reading

ஆலிம்களின் மரணம் அதன் படிப்பினை !

collage_20150405161037404_20150405161152880

மறுமை நாளை ஒட்டி நடைபெறும் நிகழ்வுகள் பல நடந்தேறிவிட்டது

அதில் ஒன்று தான். நபிமார்களின் வாரிசுகள் என்று நபிகளாரால் பட்டம்பெறபட்ட ஆலிம்கள் சமூகத்திலிருந்து பரிக்கபடுவர்.

சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தை உறைய வைத்த 8 ஆலிம்களின் மரணம். இந்த நிகழ்வு நம் சமூகத்தை துக்கத்தில் ஆழ்த்தியது. இந்த நிகழ்வை நம் சமூகம் சரியாக உட்கொனர்ந்ததா என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை !! இந்த விபத்து செய்தி பரப்பட்ட விதமே மிக கொடூரமாகவும், வன்மமாகவும் இருந்தது.

1 – #அந்த விபத்தில் இறந்தது மொத்தம் 8 பேர் தான்,ஆனால் செய்தி பரப்பட்ட போது 9 பேர் என்று உயிருக்கு போராடி கொண்டிருந்த ஒருவரையும் சேர்த்து 9 பேர் என்று தவறாக பரப்பியது. பலி எண்ணிக்கையை அதிகபடுத்தி அதிர்ச்சியடைய வைத்து காசு பார்ப்பது பத்திரிக்கையாளர்கள் , ஊடவியலாளர்கள் செயலாகும். அதை ஏன் நம் மக்கள் செய்தார்கள் ???

2- #மிக கொடூரமாக இரத்த வெள்ளத்தில் பிணவறையில் ஆடைகள் அலங்கோலமாக கிடக்கும் நிலையில் ஆலிம்களின் ஜனாசாக்களை வாட்சப் மற்றும் முகநூளில் பரப்பியது மிக கொடூரமாக செயல். இப்படி பரப்பியதால் அந்த புகைப்படங்களை பார்த்து அவர்களின் உறவினர்கள் எவ்வளவு கதறினார்கள் என்பதை நீங்கள் அறிந்தீர்களா ??

ஜனசாவை பெற்றபோது கூட அழாத அழுகை அந்த புகைப்படங்களை கண்டு அழுதது தான் அதிகம். இஸ்லாம் ஒரு ஜனாசாவிற்க்கு கொடுக்கும் மரியாதை நாம் அறியாதவர்களா? ஒரு யூதபெண்ணின் ஜனசாவிற்க்கு எழுந்து நின்றார்கள் நபிகளார். இதை எத்தனை முறை படித்திருப்போம் கேட்டிருப்போம். அப்படி இருக்கையில் ஒரு ஆலிமின் ஜனாசாவிற்க்கு கொடுக்கும் மரியாதை இவ்வாறு இருக்குமா ???

மக்களிடம் இரண்டு விடயங்களை பரப்பும் விடயம் அதிகமாகி விட்டது.

#ஆபாசம்

#வன்முறை

இரத்த வெள்ளத்தில் விபத்தில் அடிபட்டு கிடக்கும் சடலங்களை புகைப்படமெடுப்பது அதை பகிர்வது என்று வன்முறையை விரும்பும் போக்கு மிக கொடூரமானது .

ஒரு போர்க்களத்தில் பிலால் (ரலி ) அவர்கள் இரு பெண்மணிகளை  நபி (ஸல்) அவர்கள்   அவர்களை

சந்திக்க அழைத்துவரும்போது போர் நடந்து இரத்த வெள்ளத்தில் கிடக்கும் உடல்களின் மத்தியில் அந்த

பெண்களை அழைத்து வருவார்கள்.

அந்த இரு பெண்களின் உறவினர்கள் அந்த போர்களத்தில் கொல்லப்பட்டு கை கால் எல்லாம் வெட்டப்பட்டு கிடப்பதை கண்ட அந்த பெண்கள் அந்த கதறி அழ ஆரம்பித்தார்கள் . அதில் ஒரு பெண்மணி தலையில்

கைவைத்தவர்களாக அப்படி அந்த பிணங்களுக்கு மத்தியில் அமர்ந்து விட்டார்கள் .

இதை அறிந்த நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களை கடிந்து கொண்டவர்களாக

“உமக்கு இவர்களை வேறு வழியில் அழைத்துவர தெரியாதா ? என்று கேட்பார்கள்.

இன்று இந்த சமூகம் செய்துள்ள விடயமும் இதுபோல் தானே இரத்த வெள்ளத்தில் கிடக்கும்

ஜனாசாக்களை பகிர்ந்து கொள்கின்றனர் .

இப்போதைய மக்கள் ஒருவன் விபத்தில் அடிபட்டால் அவனை காப்பாற்ற உதவியோ செய்யாமல்

முதலில் எடுத்தவும் அவனின் இரத்த வெள்ளத்தில் கிடக்கும் நிலையை படம் பிடிக்க

தன்னுடைய கேமரா போன்களை அல்லவா கையிலெடுக்கிறார்கள்.

ஏன் மனிதம் மரத்து போனது !!!

இதை விட கொடூரமான ஒருகூட்டம் தங்களுடைய வக்கிர சிந்தையை வெளிபடுத்தினர் .

“விபத்தில் இறந்தால் எப்படி இவர்கள் எல்லாம் ஷஹீத் ஆகமுடியும் ? ” என்று ஈனத்தனமாக

கேள்வி எழுப்பிய கூட்டம்  எவ்வளவு கேவலம்.

ஷஹீத்தின் அந்தஸ்த்தில் பலவகை உண்டு , போரில் மரணத்தவர்கள்

ஷஹீதின் முதன் நிலை , அதன் பிறகு நீரில் மூழ்கி மரணித்தவர் , தீக்கிரையாகி மனித்தவர்கள்,

திடீர் கொடிய (கேன்சர் ) போன்ற நோயால் மரணிப்பவர்கள். திடீர் விபத்துக்கள் .

இதுவெல்லாம் அல்லாஹ்வின் ஏற்பாடு . இதை கேவலமாக பேசும் சிலரின்

வக்கிரபுத்தி மிக மோசமானது .

முஆத் இப்னு ஜபல் (ரலி) ஒரு மிக பெரிய  தோற்று நோயால் இறந்தார்கள் அவர்களையும்

அதற்காக அவர்களை கேட்ட மௌத் என்று பேசுவீர்களா ?

மரணத்தில் நல்ல மரணம் கேட்ட மரணம் என உங்களுக்கு எப்படி தெரியும் .

ஒரு உடலில் இருந்து ஒரு உயிர் பறிக்கப்படும் போது படும் வேதனையை நீங்கள்

அறிதவர்களா ????

முதலில் இந்த விபத்தில்  மரணித்தவர்கள் நிலையை பாருங்கள் .

அதில் இறந்த அனைவரும் இளம் ஆலிம்கள்

ஒருவர் திருமணம் முடித்து 40 நாட்கள்

ஒருவருக்கு 6 மாத குழந்தை

ஒருவர் மாணவர்

இப்படி ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில்

துவக்க காலகட்டம்.

அவர்களின் குடும்பங்களின் தவிப்பை நினையுங்கள்.

அதில் இறந்தவர்களின் குடும்பங்கள் ஒன்று செல்வந்தர்கள்

அல்ல. வெறும் ஆறாயிரம் ஏழாயிரம் ரூபாய் வருமானத்தில்

வாழ்க்கை நடத்தியவர்கள். இனி அதுவும் கேள்விக்குறியான நிலை .

இன்ஷா அல்லாஹ் நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம் .

நட்புடன்

முகமது ஜுபைர் அல்புஹாரி

நோய்கள் பற்றி இஸ்லாம்

islam_by_khaled_etman-d35n1ra

இறைவனிடமிருந்து வரும் சோதனைகள் அவனின் நெருக்கத்திற்கு

அடையாளமாகும். இறைவன் தரும் நோய்நொடிகள் பாவங்களை களைவதற்காகவும் மறுமையில் அந்தஸ்த்தை கூட்டுவதற்க்காகவும் இருக்கும் .

எந்தவித பாவங்களும் இல்லாமல் இறைவனை சந்திக்க சுவனத்தின் படித்தரங்களை பெற நோயை ஏற்படுத்துகிறான் சோதிக்கிறான் நம் சமூகம் மிக தெளிவு பெறவேண்டும் ஒரு நோய்வாய்பட்டவரை பார்த்து தவறாக பேசிவிட கூடாது “இவர் செய்த பாவங்களுக்காக தான் இப்படி இறைவன் கொடுத்து விட்டான் ” என்று தவறாக பேசிவிட கூடாது. இப்படி

பேசுபவர் வந்திருக்கும் நோயைவிட பலாமூசீபத்தை தன்மீது இறக்கிகொள்கிறார் என்பதே உண்மை !!

நோய்வாய்படுபவர்களின் பலர் நல்லவர்கள் என்று தான் ஹதீஸ்களில் பார்க்கமுடிகிறது.

அல்லாஹ்வின் அருளுக்குரியவர்கள்

நபிகளின் வார்த்தைகளில் சொல்வதானால்

அல்லாஹ் நோய்வைபட்டவர்களை பிரியபடுகிறான் .

இறைபிரியர்க்கு உண்டான ஒருவரை மனிதன் தன் சிந்தையால்

சபித்துவிட கூடாது

அது இறைவனுக்கும் அவருக்குமான விடயம். அதில் உங்கள் கருத்தை சொல்லி பாவமூட்டையை தேடி பெறாதீர்கள் !!

நோய்வாய் படுவது நல்லவர்களுக்கு அதிகமாக இருக்கும்

நோய்வாய் பட்டு இருந்த நபிகளார் (ஸல்) அவர்கள் மரணபடுக்கையில்

இருக்கிறார்கள் அப்போது இப்னு மஸ்வூத் (ரலி) வருகிறார்கள்

நபிகளாருக்கு காய்ச்சலால் உடல் முழுதும் கொதிக்கிறது. அவர்கள் மீது

இரு கம்பளி போர்வை போர்த்தபட்டிருந்தது. அப்போது  இப்னு மஸ்வூத் (ரலி)

அவர்கள் போர்த்தபட்டிருந்த இருபோர்வைக்கும் மேல் கைவைக்கிறார்கள்

உடலின் உஷ்ணம் இரு கம்பளிபோர்வையையும் தாண்டி கொதிக்கிறது

அப்போது இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் “யா ரசூலுல்லாஹ் உங்களின் மேனி  கடுமையாக கொதிக்கிறதே ? ” என்றபோது நபிகளார் ” ஆம்

மனிதர்களில்  இருவருக்கு உண்டாகும்  நோய் என் ஒருவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றார்கள். அப்போது நபி தோழர்கள் அந்த காய்ச்சலின் வீரியத்தை பற்றி பேசவில்லை இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள்

” அப்படி என்றால் இந்த காய்ச்சலுக்கான மறுமையின் கூலியும் இருமடங்கா?” என்றதும் “ஆம் உங்களில் ஒருவர் நோய்வாய்படும்

கூலியைவிட இருமடங்கு பெறுவேன் என்றார்கள்.

ஆக நபிகளாருக்கு  இருகம்பளி போடப்பட்டும் கொதிக்கின்ற காய்ச்சலுக்கு

கூலி இருமடங்கு என்ரால் நோய் நல்லவர்களுக்கான அடையாளம் என்றே சொல்லலாம்.

குறிப்பாக நபிளாரின் மரணபடுக்கையிலிருந்து மூன்று முறை எழுந்து

மயக்கமுற்று கீழே விழுந்தார்கள் என்று சொன்னால் கடும்

நோய் நல்லவர்களின் அடையளாம் இறைவனின் நெருக்கம்

கிடைக்க பெற்றவர்கள் என்பதே பொருத்தம்.

அதே நோயில் இறந்தவர்களை ஏசுவது மிக பெரிய பாவங்களின் ஒன்று.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அவர்கள்
கூறினார்கள்:

இறந்தோரை ஏசாதீர்கள்! ஏனெனில்
அவர்கள் தாம் முற்படுத்தியவைகளின்
பால் சென்று சேர்ந்துவிட்டார்கள்.”
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல் :புகாரி 1393
Book :23

நட்புடன்

முகமத் ஜுபைர் சித்தீகி அல்புஹாரி

ஆபாச உலகம்

Crowd_in_support_of_Gay_Marriage_2

இந்த உலகிற்கு விஞ்ஞான உலகம்,
அறிவியல் உலகம் எனபல பெயர்கள் சொல்ல பட்டாலும் இந்த உலகிற்கு
மிக பொருத்தமான பெயர் ஆபாச
உலகம் .

ஆபாசத்தை மக்களிடம் பரப்புவதில்
ஏற்பட்டுள்ள ஈடுபாடு அதிகரித்துள்ளதே தவிர குறைந்தபாடில்லை.

இந்த விடயம் இஸ்லாமியர்களிடம்
அதிகரித்துள்ளது வருத்ததிற்குரியது.

#ஆபாசத்தை பரப்புபவனை இஸ்லாம்
மனிதகுலத்தின் எதிரியாக பார்க்கிறது.

நபிஸல் அவர்கள் கூறினார்கள்
என்னுடைய உம்மத்தில் எல்லோரும்
மன்னிப்பிற்குரியவர்கள் , பாவங்களை
பகிரங்கமாக செய்பவனை தவிர.

இந்த ஹதீஸ் பாவங்களை பகிரங்கமாக
செய்பவருக்கு மட்டும் அல்ல. ஒருவர்
மறைமுகமாக செய்த பாவத்தை பகிரங்கபடுத்தபவனுக்கும் இது பொறுந்தும்.

சில நாட்களுக்கு முன் ஒரு முஸ்லிம்
என்று சொல்லி பர்தா அணிந்து ஒருபெண்
மாற்று மதத்தவருடன் வெளிவந்த
ஒரு முத்தகாட்சி புகைப்படமானது.

அது உண்மையோ, பொய்யோ
அது லால்பேட்டை பெண் திருமணமாகி இரு
குழந்தைகள் உள்ளது என்று சொல்லி
அதை அதிகமாக பரப்புங்கள் என்று
அந்த அசிங்கமான புகைபடத்தை
பரப்பினர். இது முகநூலிலும்,
வாட்அப்பிலும் அதிகமாக
இஸ்லாமியர்கள் மத்தியில்
அதிகமாக பகிரபட்டது.

இதுவே அவர்களுடைய
சகோதரியோ உறவினர் வீட்டு பிள்ளைகளோ இப்படி செய்தாலும்
இதுபோல் பரப்புவார்களா?

இதுபோன்ற ஆபாசத்தை பரப்புவது ஹராம் ஆகும்.
ஒரு ஊரில் இதுபோன்ற ஒரு பிரச்சனை ஏற்பட்டால் முதலில் அதை ஊர்ஜீதபடுத்தி பின் அந்த ஜமாதிற்கு
தெரியபடுத்தி அதற்கான தீர்வை
காண்பதே நியதி அதை விட்டுவிட்டு
இதுபோன்ற அனாச்சாரத்தை பரப்புவதால் என்னபயன்????

அதிகமாக பரப்புவதற்கு இது என்ன
குர்ஆன் வசனமா??? அல்லது நபி மொழி ????

தெளிவு பெறுங்கள் பின் சமூகத்தை
தெளிவு பெற செய்யுங்கள்.

. . . . . . . . . . . . . . . நட்புடன்
. . . . . . . . . . . முகமது ஜுபைர் அல்புகாரி

பெற்றோரின் சிறப்பு

Father Lifting Young Son

நபிகள் நாயகம்(ஸல்) நவின்றார்கள் :
“பெற்றோர்களுக்கு உதவி செய்யும் பிள்ளைகளுக்கு (எனது) வாழ்த்து உண்டாகட்டும் அவருடைய வயதை அல்லா அதிகப் படுத்துவானாக. ஆமீன்”
நூல்- புஹாரி

” பெற்றோரின் பிரியத்தில் தான் அல்லாஹ்வின் பிரியமும் இருக்கிறது. பெற்றோரின் கோபத்தில் தான் அல்லாஹ்வின் கோபமும் இருக்கிறது. ”

அறிவிப்பாளர் :அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னு ஆஸ் (ரலி)
நூல்- திர்மிதி

“பெற்றோரை (மனம் நோகச் செய்து) அழுது கண்ணீர் வடிக்கச் செய்வது பெரும் பாவம் ஆகும் – தண்டனைக் குரியதாகும்.”
நூல்- புஹாரி

குர்ஆனில் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும்  அடுத்தபடியாக முன்னுரிமை கொடுக்கபடுவது பெற்றோர்கள்தான்.

அத்தகைய பெற்றோரின் பொருத்தம் இல்லாமல் சுவனத்தின் வாசல் திறக்கபடாது .

மற்றொரு சந்தர்ப்பத்தில் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் மனிதர் ஒருவர் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! பிள்ளைகள் மீது தாய் – தந்தையருக்குரிய உரிமைகள் என்ன? எனக்கேட்டார். அதற்கு முஹம்மத் (ஸல்) அவர்கள், ‘தாய் தந்தையரே உம்முடைய சுவனம் ஆவார்கள். அவர்களே உம்முடைய நரகமும் ஆவார்கள்’ என்று கூறியதாக அபூ உமாமா (ரலி) அறிவித்துள்ளார்கள். (ஆதாரம் : இப்னு மாஜா)

இந்த இரண்டு நபி மொழிகளும் பெற்றோரின் சிறப்பையும் மகத்துவத்தையும் எடுத்துக் காட்டக்கூடியதாக உள்ளன. அதனால் அவர்கள் உண்மையான மன மகிழ்ச்சி மிக்கவர்களாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அது ஒவ்வொரு பிள்ளையினதும் பொறுப்பு என்பதை இந்நபி மொழிகள் தெளிவுபடுத்திக்கொண்டிருக்கின்றன.

மேலும் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் மனிதரொருவர் ஒருமுறை வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! என் அழகிய நட்புக்கு மனிதர்களில் அதிக தகுதியுடையவர் யார்?’ எனக் கேட்டார். அதற்கு முஹம்மத் (ஸல்) அவர்கள் ‘உன் தாய்’ என்று கூறினார்கள். அதன் பின்னர் ‘யார்?’ என அம்மனிதர் கேட்டார். அப்போதும் முஹம் மத் (ஸல்) அவர்கள் ‘உன் தாய்’ என்றார்கள்.

அதனைத் தொடர்ந்து அம்மனிதர் மீண்டும் 3வது தடவையாகவும் ‘யார்?’ எனக் கேட்டார். அதற்கும் முஹம்மத் (ஸல்) அவர்கள்‘உன் தாயே!’ என்றார்கள். எனினும் அம்மனிதர் நான்காவது தடவையாக ‘யார்?’ என வினவினார். அப்போது ‘உனது தந்தை’ என்றார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

(ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

இஸ்லாத்தில் பெற்றோரின் மகத்துவம்

முஹம்மத் (ஸல்) அவர்கள், இறந்து விட்ட தம் பெற்றோருக்காகப் பிள்ளைகள் நிறைவேற்ற வேண்டிய பணிகளையும் கூட சொல்லி வைத்துள்ளார்கள். இதன்படி பெற்றோர் விவகாரத்தில் இஸ்லாம் எவ்வளவு தூரம் கரிசனை காட்டி இருக்கின்றது என்பது நன்கு தெளிவாகின்றது.

ஒருமுறை மனிதர் ஒருவர் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘எனது பெற்றோர் இறந்து விட்டால் அவர்களுக்கு உபகாரம் செய்தல் என்று ஒரு விடயம் உள்ளதா?’ எனக் கேட்டார். அதற்கு முஹம்மத் (ஸல்) அவர்கள் ‘ஆம்’ எனக் கூறிவிட்டு பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டார்கள்.

* ‘அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தல்,

* அவர்களுக்காகப் பாவமன்னிப்பு கோருதல்

* அவர்கள் செய்துகொண்ட உடன்படிக்கைகளை நிறைவேற்றுதல்,

* அவர்கள் மூலமான உறவுகளைச் சேர்த்து நடத்தல்

* அவர்களது நண்பர்களைக் கொளரவப்படுத்தல்

என்றும் கூறினார்கள். (ஆதாரம் : அபூதாவுத்)

இன்றைய நிலைமை

என்றாலும் அல்-குர் ஆனும், ஸ¤ன்னாவும் பெற்றோருக்கு அளித்து இருக்கின்ற இந்த மகத்துவத்தையும், சிறப்பையும் இன்றைய கால கட்டத்தில் அறியாதவர்களாகவே பெரும்பாலானவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அறிந்திருக்கும் சிலரோ அவற்றைப் பொருட்படுத்தாது நடந்து கொள்ளுகின்றனர். இதனை அவர்களது நடத்தைகளும், செயற்பாடுகளும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இதேவேளை யமன் நாட்டைச் சேர்ந்த நபரொருவர் முஹம்மத் (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வந்தார். அவரை முஹம்மத் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். ‘யமன் நாட்டில் உமக்கு உறவினர்கள் எவராவது இருக்கின்றாரா?’ என வினவினார்கள். அப்போது அந்நபர் ‘ஆம் என் பெற்றோர் இருக்கின்றனர்’ என்றார். அப்போது முஹம்மத் (ஸல்) அவர்கள் ‘நீர் இங்கு வருவதற்கு அவர்கள் அனுமதி வழங்கினாரா?’ எனக்கேட்டார். அச்சமயம் அந்நபர், ‘இல்லை.

நான் அனுமதி கேட்கவில்லையே!’ என்றார். அப்படியென்றால் நீர் திரும்பிச் செல்லும். இங்கு வரவென அவர்களிடம் (பெற்றோர்) அனுமதி கேளும். அவர்கள் அனுமதி அளித்தால் இங்கு வந்து ஜிஹாதில் கலந்துகொள்ளலாம். இல்லையெனில் அவர்களுக்குச் சேவை புரிந்த வண்ணம் இருந்து அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வீராக! எனக் கூறி அனுப்பியதாக அபூ ஸயீத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (ஆதாரம் : அபூதாவூத்)

மேற்சொன்ன நபி மொழிகளைப் பொதுவாக எடுத்து பார்த்தால் பெற்றோருக்கு பணிவிடை செய்வதானது அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான செயல்களில் ஒன்றாக விளங்குவதைக் காணக்கூடியதாகவுள்ளது. அதேநேரம் அது இறைவழியில் போராடுதல் (ஜிஹாத்) ஹிஜ்ரத் செய்தல் போன்ற நற்காரியங்களை விடவும் மேலான ஒன்றாகவும் விளங்குகின்றது.

பெற்றோருக்கு சேவை செய்தல் என்ற நல்லமல் செய்தால் சுவர்க்கம். இல்லையேல் நரகம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், வயது முதிர்ந்த தன் பெற்றோர் இருவரையோ, அல்லது ஒருவரையோ பெற்றிருந்தும் சுவனம் செல்லாமல் போய் விட்ட மனிதன் நாசமடைவானாக! பின்னர் நாசமடைவானாக! பின்னர் நாசமடைவானாக.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்

 

தொழுகையா? தாயா?

பனு இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த ஜுரைஜ் என்று அழைக்கப்பட்டு வந்த ஒருவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவரின் தாயார் வந்து அவரை அழைத்தார். அவருக்கு பதில் கூற ஜுரைஜ் மறுத்துவிட்டார். நான் அவருக்கு பதிலளிப்பதா, அல்லது தொழுவதா? என்று (மனத்திற்குள்) கூறினார். பிறகு (மீண்டும்), அவரின் தாயார் அவரிடம் வந்து, (தான் அழைத்தும் தன் மகன் பதிலளிக்க வில்லையே என்ற கோபத்தில்), இறைவா! விபசாரிகளின் முகத்தில் விழிக்கச் செய்யாத வரை அவனுக்கு (ஜுரைஜுக்கு) மரணத்தைத் தராதே என்று கூறினார்.
(
ஒரு நாள்) ஜுரைஜ் தன் ஆசிரமத்தில் இருந்தார். அப்போது ஒரு பெண், நான் ஜுரைஜை நிச்சயம் சோதனைக்குள்ளாக்குவேன் என்று கூறினாள். அதற்காக, ஜுரைஜின் முன்பு வந்து அவருடன் (தகாத உறவு கொள்ள அழைத்துப்) பேச முனைந்தாள். அவர் (இணங்க) மறுத்துவிட்டார். எனவே, அவள் ஒர் இடையனிடம் சென்று, தன்னை அவனுடைய ஆளுகைக்குள் ஒப்படைத்துவிட்டாள். அதன் காரணமாக ஒரு (ஆண்) குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு, இவன் ஜுரைஜுக்குப் பிறந்தவன் என்று கூறினாள். (இதைக் கேட்ட) மக்கள் (வெகுண்டெழுந்து) ஜுரைஜிடம் வந்தனர்; (கோபாவேசத்தில்) அவரின் ஆசிரமத்தைத் தகர்த்து உடைத்துவிட்டனர்; அவரை (அவரின் அறையிலிருந்து) இறக்கி அவரை ஏசினர். ஜுரைஜ் உளுச் செய்து தொழுதார். பிறகு அக்குழந்தையிடம் வந்து, குழந்தையே! உன் தந்தை யார்? என்று கேட்டார். அந்தக் குழந்தை (வாய் திறந்து), (இன்ன) இடையன் என்று கூறியது. இதைச் செவியுற்ற மக்கள், உங்கள் ஆசிரமத்தைத் தங்கத்தால் நாங்கள் கட்டித் தருகிறோம் என்று (ஜுரைஜிடம் அனுமதி) கேட்டார்கள். அதற்கு ஜுரைஜ் இல்லை; களிமண்ணால் கட்டித் தந்தாலே போதும் என்று கூறிவிட்டார். ஆதாரம் : புகாரி 2482  அறிவிப்பவர்: அபு ஹுரைரா

 

இந்த ஜுரைஜின் தாயார் விபசாரியை பார்க்காமல் மரணிக்க செய்யாதே என்று கூறினார்கள்

இதுவே விபசாரம் செய்யாமல் மரணிக்க செய்யாதே !! என்று இறைவனிடம் துஆ

செய்திருந்தால் கட்டாயம் அல்லாஹ் அதை ஏற்றுக்கொண்டிருபான் . அது எவ்வளவு

பெரிய இறைநேசரானாலும் சரி !!!

 

 

                               தொகுப்பு

                          முகமது ஜுபைர் அல்புஹாரி

விண்கலையியல் மறைந்தது !

11084292_1584775978473286_3562668036196612709_n

நாம் தினமும் தொழுகும் நேரத்தை
கணக்கிட்டு கொடுத்த
எமது அன்பிற்குரிய பாட்டனார்
ஹஜ்ரத் கிப்லா M.K.M ஹத்தீப் சாஹிப் சித்தீகி பாஜில் மிஸ்பாஹி(விண்கலை நிபுணர்)
அவர்களின் மரணம் ஆலிம்களிடம்
ஈடுசெய்ய முடியா இழப்பாகும்,

அவர்களை பற்றிய சிறுகுறிப்பை இங்கு நான்
குறிப்பிடுகிறேன்

மஹ்தூம் ஆலிம் அவர்களின் மகனாரவார்
சொந்த ஊர் : கட்டுமாவடி

கல்வி: பாஜில் மற்றும் மிஸ்பாஹி பட்டம் பெற்றார்கள். யுனானி மருத்துத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்கள்.
விண்கலை (ஃபலகியாத்) பயில 1 ஆண்டு எடுத்துகொண்டார்கள்

Continue reading