இஸ்லாத்தில் சமூகநீதி பகுதி 3



*இச்சைகளும் இஸ்லாம் கூறும் வழிகளும்

ஒருவன் நோன்பு நோற்று உடலின் இச்சைகளை அடக்கி மறுமைக்காக உழைக்க முடியும். நோன்பு நோற்காமல் அனுமதிக்கப்பட்ட முறையில் உடலின் தேவைகளை பூர்த்தி செய்து இன்பகரமான முறையில் மறுமைக்காக உழைக்க முடியும்.

இரு நிலையிலும் அல்லாஹ்வை எதிர்நோக்கி இருப்பதே அவசியம்.

தனி மனிதனின் தேவைக்கும் உடல் ஆசைகளுக்கும் உண்டான் நீதியை பெற்று தந்தது இஸ்லாம்.இதை மானுட விடுதலை என கூறலாம்.

பெளத்தம் கிருஸ்துவம் கூறுவதுபோல் உடல் இச்சைகளை அடக்கினால் மனிதன்
ஒருகட்டத்தில் அழுத்தத்திற்கும்
இயற்கைக்கு மாறான விபரீத‌ முடிவுகளை எடுக்கும் நிலைக்கு சென்றுவிடுகிறான்.

*இஸ்லாம் எப்படி சமூக நீதியை நிலைநிறுத்துகிறது…?

ஒருமைப்பாடு என்பது தான் அந்த விதி.

பிரபஞ்சத்திற்கும் மனித வாழ்விற்கும்,
மனிதனுக்கும் மற்ற படைப்புகளுக்கும்,
மனிதனுக்கும்‌ அவன் உள்ளத்திற்கும்
தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும்,
ஆன்மாவிற்கும் உடல் வேட்கைக்கும்,
வானத்திற்கும் பூமிக்கும் இடையே
நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்தும் ஒருமைப்பாட்டை இஸ்லாம்
கொண்டுவருகிறது.

இந்த சமாதானத்தை உடலை பலியாக்கியோ, ஆன்மாவை பலியாக்கியோ நிலை நிறுத்தவில்லை.
மாறாக உடலையும் ஆன்மாவையும் செயல்பட வைக்கிறது. இரண்டிற்குமாக
செயல்பாட்டை நீதியாக பகிர்ந்தளிக்கிறது.

*சமூகநீதியை எப்படி நிலைநிறுத்துவது

தனிமனிதனை பலியிட்டோ‌ சமூகத்தை பலியிட்டோ

ஒரு கூட்டத்திற்காக மற்றொரு கூட்டத்தை பலியிட்டோ அல்லது ஒரு தலைமுறைக்காக மற்றொரு தலைமுறையை பலியிட்டோ

இச்சமாதான நிலையை கொண்டு வருவதில்லை. எல்லா தரப்பினருக்கும்
நீதியான முறையில் உரிமைகளையும் கடமைகளையும் பகிர்த்தளிப்பதே தீர்வு.

தனிமனிதன் சமூகம் சமுதாயம் எல்லாவற்றிக்கும் ஒரே இலக்கு கொண்ட ஒரே சட்டம் மட்டுமே ஆளும்.

தனிமனித செயல்பாடு மற்றும் சமூக செயல்பாட்டிற்கு முரண்படாதாவாறு இருக்கும்.இருக்கும்
தலைமுறைக்கும் வரபோகும் தலைமுறையை வளர்ச்சி பாதைக்கு வித்திட்டு உழைக்கும் படைத்தவனை நோக்கி ஒன்றுபட்டு நிற்கும்.

இப்படி எல்லாவற்றையும் ஐக்கிய படுத்தும் கோட்பாடுதான் இந்த ஏகத்துவ மார்க்கம். இறைவன் ஒருவனே அவன் ஒருமைப்பாட்டை விரும்புபவன் என்பதே
சிறப்பம்சம் ஆகும்.

அந்த ஒருமைப்பாடு மூலம் தான் அரசாட்சி , பொருளாதாரம், உரிமைகள், கடமைகள் தொடர்பான வழிகாட்டல்கள் வரையறை சட்டங்களை இஸ்லாம் தருகிறது.

*இஸ்லாத்தின் சட்டங்கள் மனித இயல்புக்கு சிகிச்சை அளிக்கிறது.

இஸ்லாத்தின் சட்டங்கள் ஒழுங்குமுறைகள் கூறுவதில் மூலம்
மனிதனிடம்‌ இயல்பாக இருக்கும் சுயநலம், கஞ்சத்தனத்திற்கு சிகிச்சை
அளிக்கிறது.

மனிதனால் சுமக்க இயலாத சுமையை அது சுமத்தவில்லை.

தனிமனித விருப்பங்களும் ஆசைகளும்
சமூகத்தின் மீது புகுத்தி அத்துமீறுவது எப்படி சமுதாய அநீதியோ, அதுபோல் சமூகம் தன் சித்தாந்தத்தை மனித இயல்பின் மீது புகுத்தி அத்துமீறுவதும் அநீதியே

இதனால் தனிமனிதனின் உரிமைகள் பறிபோகும் .

சமூகமோ தனிமனிதனோ எந்த இடத்திலும் மோதிகொள்ளாது பார்த்துக்கொள்வது அவசியம்.

இஸ்லாத்தின் சட்டங்கள் சிறைபடுத்தவோ அடக்குமுறைபடுத்தவோ முனையவில்லை.

பின்னூட்டமொன்றை இடுக