சமூக வலை தளங்களால் கேள்வி குறியாகும் அடுத்த தலைமுறை



ஒரு காலகட்டத்தில் சினிமா மக்களை சீர் கெடுத்தது. அதன்‌தொடர்ச்சி அல்லது நவீனப்படுத்தபட்ட அப்டேட் வெர்சன்
தான் குட்டி சாத்தான் கைபேசி.
எல்லோர் கைகளிலும் ஐவிரல்களில் ஆறாவதாக முளைத்து விட்ட செல்போன்கள்.

முன்னோருகாலம் தவறுகளை தேடிசெல்லும் நிலையில் தனியாக
அவர்கள் அடையாளப்படுத்தபடும் காலம் போய் இப்போது எல்லோர் கைகளிலும் வந்துவிட்ட கைபேசி
பாவத்திற்கான திறவுகோலாக மாறிவிட்டது.

நமக்கும் கைபேசிக்கும் இடையே எந்த
தடையும் இல்லை .நாம் நினைத்தால்
நன்மையாக பயன்படுத்தலாம் அல்லது
தீமையை பார்க்க பகிர பயன்படுத்தலாம்.

நம் கூட பழகும் எத்தனை நபர்கள் இந்த கைபேசியால் சீரழிந்து வாழ்க்கையை
தொலைத்து நிற்கின்றனர்.

அதிலும் குறிப்பாக சமூக வலைதளங்கள் என்ற பெயரில் வளம் வரும் ஆப்கள். சமீபத்தில் ஒரு செய்தி
ட்ரெண்ட் ஆனது பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் என்ற திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள பெண் பப்ஜி என்னும் விளையாட்டில் பழகிய கள்ளக்காதலனை கரம்பிடிக்க நேபாளம் வழியாக இந்திய மாநிலமான உத்திர பிரதேசம் வந்து சச்சின் என்ற இளைஞரை கரம்பிடித்துள்ளார்.

இந்த கேடுகெட்ட கள்ளக்காதலை ஆதரித்து குறிப்பாக ஊடகங்கள் மைக்கை தூக்கிகொண்டு இவர்கள் பின்னால் செல்வது கேடுகெட்ட வெக்ககேடு…

மதம் தாண்டி சிந்திக்கையில் திருமணம் ஆன பெண் வேறொரு இளம் ஆணோடு
வாழ விரும்புவது எவ்வளவு கேவலமான
எண்ணம் இதை சரி என காண்பிற்க
இந்த ஊடகங்கள் முயல்கின்றனர் போலவே உள்ளது.

கிடைக்கிற குப்பையெல்லாம் செய்தியாக்கி மக்களிடம் எதை கொண்டு செல்கிறோம்
என்ற Sense இல்லாமல் Sensationalலை
மட்டும் தேடி அலையும் மீடியாக்கள் பற்றி
விபச்சார ஊடகங்கள் என்ற பதம் பயன்படுத்தப்படுவது மிகசரியானது.

பேஸ்புக் காதல் இன்ஸ்டாகிராம் காதல் என காதலுக்கு நவீனத்துவம்படுத்த முனந்துவிட்டதை‌ பார்க்கையில் இவர்
இயல்பான வாழ்வை விட்டு செயற்கையான வாழ்வை நோக்கி சென்றுவிட்டனர் என்பது விளங்கும்.

செயற்கையாக போட்டோவிற்கு சிரிப்பது துவங்கி
தங்கள் அன்றாட வாழ்வில் நடக்கும்
விடயத்தை சமூக வலைதளங்களில் பரப்பி மகிழ்வதாக கருதுகின்றனர்.

இவைகளை மற்றவர்கள் பார்க்கவேண்டும் . தங்களை ரசிக்க வேண்டும். தாங்கள் மற்றவர்கள் போல அல்ல என காட்டிக்கொள்ள முனைகின்றனர்.

திருமணம் பந்தமில்லா உறவு Living together என்ற மேற்கத்திய கலாச்சாரம்,
ஒரு ஆணும் ஆணும் திருமணம் செய்வது ஒரு‌பெண்ணும் பெண்ணும்
திருமணம் செய்வது அல்லது சேர்ந்து
வாழ்தல் என பல மனநோயாளிகளை சமூக வலைதளங்களில் சர்வ சாதாரணமாக காண்கையில் அடுத்த தலைமுறைக்கு தீய பழக்கங்களை செய்ய எளிய வழிகளை காட்டுகிற தளங்களாக மாறி போனது கொடுமையின் உச்சம்….

இந்த உணர்வு சமூகத்தின்‌மீது மட்டுமல்ல ஒவ்வொரு குடும்பத்தினரும்
கவலை கொள்ளும் விடயம்.

எங்கள் பார்வையில் இவை சரிதான் என்று இந்த சீர்கேடுகளை ஆதரிக்கும்
கூட்டம் வந்து விட்டது தான்‌ சீர்கெட்ட
சிந்தனையாளர்கள் உருவாகிவிட்டார்கள் என்பதின் உண்மை நிலை . சிந்தனைகள் சமுதாயத்தின் உயர் நிலைக்கு கொண்டுபோக வேண்டுமே தவிர
கீழ் நோக்கி இழுத்து செல்ல கூடாது.
அப்படி கொண்டு செல்வது சிந்தனை அல்ல மனோஇச்சை என்று‌சொல்வதே
சரியான பதம். தான் செய்ய ஆசைப்படும் விடயத்தையே மனம் ஆதரிக்கும் அதையே விரும்பும்.

சிந்தனையால் மக்களை சீர்திருத்தியோரும் உண்டு
சீர்கெடுத்தோறும் உண்டு.
ஆனால் அந்த சீர்கெட்ட சிந்தனையின்‌ தாக்கம் எத்தனை தலைமுறை வரை இருக்கும் என்பதில் தான் நம் அடுத்த தலைமுறை எப்படி இவைகளை எதிர்கொள்ளபோகிறது என்பதின்
அச்சம் தான் நம்மை உறையவைக்கிறது.

சீர்கெட்ட சிந்தனையாளர்கள் ஒருபக்கம்
இருக்க இவைகளை பகிர்கிற அவைகளை பார்த்து பரவச படுகிற
லைக்குகளை அள்ளி ஆதரவு அளிக்கும் இளம் தலைமுறையினர் அவர்களை ட்ரெண்ட் ஆக்கும் இழி செயல் மிக மோசமான உளவியல்.

தீர்வு தான் என்ன??? அடுத்த தலைமுறையை மீட்பது எப்படி???

சிந்தனைகயாளருக்கும் சரி இளம் தலைமுறைக்கும் சரி .

அடுத்த தலைமுறையை காப்பாற்ற
ஒரே வழி சுயகட்டுபாடு (Self Control)
அல்லது ஒழுக்க நெறிகள் மட்டுமே தீர்வு.
உளவியல் சிந்தனை மூலம் பெற இயலும்.

ஜேம்ஸ் ஆலன் என்ற‌ உளவியல் புத்தகத்தை படிக்கும் போது
அவர் கூறுகிற தீர்வு
உலகின்‌‌ நடப்புகளையும் சீர்கேட்டாளர்களையும் மாற்ற இயலாது.

ஆனால் நம்மை இவைகளிலிருந்து பாதுகாக்க முடியும். நம்மை சீராக்க
மனமே தீர்வு. அதை கட்டுப்படுத்த நல்ல
சிந்தனையின் பக்கம் மனதை செலுத்த
இறைவனால் நமக்கு சக்தி தரப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தினால் மட்டுமே உலக வாழ்வில் நமக்கு பாதுகாப்பு.

சுய கட்டுப்பாடு , நல்லொழுக்கம், ஆத்ம
திருப்தியுடைய வாழ்வு மூலமே அடுத்த தலைமுறை நல்வாழ்வை பெறமுடியும்.

நபிகளார் கூறினார்கள்

“அறிக: உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்துவிடும். அறிந்துகொள்ளுங்கள்: அதுதான் உள்ளம்.”

அறிவிப்பவர் : நுஅமான் பின் பஷீர் (ரலி), புகாரி-52

இந்த நபிகளாரின் கூற்று படி உள்ளம் தான் வாழ்வை சீர்படுத்தும் அல்லது சீர் கெடுக்கும்.

நம்மை சுற்றி உள்ள சூழலை உடைக்க இயலாது . ஆனால் நாம் அதற்கு பதில்
மனதை சீர் செய்யமுடியும். சமூக வலைதளங்களில் தாம் பயன்படுத்துவதில் காட்டுபாடுகள் வைத்து கொள்வதும்.

பழக்கமாகி போன தீய எண்ணங்களுக்கு diversion- மாற்று பாதை தான் சிறந்த தீர்வு

அறிவையும்‌சிந்தனையும் வளர்க்க
பயன்படுத்துதல். செல்போனுக்கு பதில்
நல்ல புத்தகங்கள், வரலாற்று நாவல்களில் நேரத்தை செலவிடுவது
உங்களை மேம்படுத்தும் உங்களை
அடுத்த தலைமுறையின் வழிகாட்டியாக்க வழிவகுக்கும்.

மனதையும் உடலையும் தூய்மையாக

வைத்து கொள்தல் அவசியம்.

அதெப்படி உடனே மாற்ற முடியும்
கடினம் தானே என்று நினைக்காதீர்.
தீமையின் விதை வேகமாக உயர் வளரும் ஆனால் வேர்கள் ஆழமாக வேரூன்றாது.நன்மை விதை வளர தாமதிக்கலாம் ஆனால் அதன் வேர்கள் ஆழபதியும்.

மனது தீய வழிக்கே இழுக்கும் தான்.
மெளலானா ரூமி கூறுவது போல்
“மனம் ஒரு கழுதை அதற்கு பிடித்தது
உலக புல்வெளி அதன் இச்சைக்கே ஒடும். அதை இழுத்து பிடித்தவர் மட்டுமே பிழைப்பர்.
பிழைக்க வேண்டும் மென்றால் மனதிற்கு மாறு செய் அதாவது Reversal Methodology , அதன் இழுப்பிற்கு செல்தல் கூடாது.

நல்ல‌ சிந்தனையை நண்பர்களிடம்
உரையாடுவோம்!!!

நாம் இருக்கும்போது நம்முடைய நல்ல
சிந்தனையை அறிவை அடுத்த தலைமுறைக்கு கொடுப்பதை விட வேறு மகிழ்ச்சி வேறில்லை. நல்ல சிந்தனையை கொடுபதிலும்‌ பெறுதிலும் உள்ள ஆத்ம திருப்தி வேறெதிலும் கிடைக்காது.

ஒரு ஹதீஸில்

‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது.

நூல்: புகாரி
அறிவிப்பாளர்‌: உமர் (ரலி)

இந்த ஹதீஸ் மூலம் நாம் அறிவது
மனம் தான் மனிதனை செயல்படுத்துகிறது . எண்ணம்தான்
அவன் வாழ்வின் நடைமுறை படுத்துகிறது.

“உள்ளத்தை வெல்வதே மிக சிறந்த புனித போர் “
என்ற நபிகளாரின் வாக்கு

உளவியல் பற்றி படிக்கையில் இதை நாம் குர்ஆன் ஹதீஸ் மூலமே தெரிந்து கொண்டோமே அதைதானே இவர்களும் கூறுகின்றனர்….என்ற நமட்டு சிரிப்பே
மேலோங்கியது…

இஸ்லாம்‌ தொடாத‌ துறைகள் இல்லை.
உலகின் அத்துணை பிரச்சனைக்கும்
தீர்வு இஸ்லாமே….

(இறுதியாக என் இஸ்லாமிய உறவுகளுக்கு இந்த உலக வாழ்வு பொழுதை போக்குவதற்கு அல்ல .
இது நமக்கு அளிக்கப்பட்டுள்ள அவகாசம். நன்மையை விதைப்போம்
நன்மைக்கான கூலியை அறுவடை செய்வோம்)

நட்புடன்
முஹம்மது ஜுபைர் அல்புஹாரி.

பின்னூட்டமொன்றை இடுக