Monthly Archives: திசெம்பர் 2014

முஸ்லிம்கள் யூதர்களையும் ,கிருஷ்துவர்களையும் அங்குலம் அங்குலமாக பின்பற்றுவார்கள்!!!

முஸ்லிம்கள் யூதர்களையும் ,கிருஷ்துவர்களையும் அங்குலம் அங்குலமாக பின்பற்றுவார்கள்!!!

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் : ”உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கலின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நாங்கள், ”அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”வேறெவரை?” என்று பதிலலித்தார்கள்.
புகாரி (3456)

இன்று பல முஸ்லிம்கள் கிருஷ்துவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் ,
ஆங்கில புத்தாண்டு என்று சொல்லகூடிய கிருஷ்துவர்களின் ஆண்டுபிறப்பையும்
அப்படியே தங்களுக்கு உரிய விழாக்கள் போல் கொண்டாடுவதை பார்த்தோம் .
பார்த்துகொண்டிருக்கிறோம் .இன்னும் பாப்போம் . ஏனெனில் இது நபிகளாரின் வார்த்தைகள் .
இப்படியும் பல முஸ்லிம்கள் வழிகெட்டுபோவார்கள் என்று நபிகளார் முன்னரே
கூறிவிட்டார்கள் . நம்மை அல்லாஹ் அப்படி வழிகெட்ட கூட்டத்திலிருந்து
பாதுகாப்பானாக …..அமீன்

பரிசுத்தமான ஆண்களுக்கு பரிசுத்தமான பெண்களே !!!

muslim-couple1

ஒரு அழகிய வரலாற்று நிகழ்வு
ஒரு கல்வி தேடும் இளைஞர் மாணவர் .
ஒரு சமயம் கடும் பசி வாடினார் . வெளியே சென்று உணவு தேடினார்.ஆனால் உணவு கிடைக்கவில்லை
மக்களிடம் கேட்டதற்கு துரதஷ்டவசமாக யாரும் உணவளிக்கவில்லை
எனவே ஒரு தோட்டத்திற்கு சென்று அங்கிருந்த
ஆப்பிள் மரத்திலிருந்து ஒரு ஆப்பிள் பழத்தை
பரித்து சாப்பிட்டு விட்டார்.

ஆனால் மனம் குற்றவுணர்வால் வருந்தி
“அந்த தோட்டம் யாருடையது ?
என மக்களிடம் கேட்டு அந்த
தோட்டத்தின் உரிமையாளிடம்
சென்று “என்னை மன்னியுங்கள்
நான் உங்கள் தோட்டத்தில் காய்த்த
ஒரு ஆப்பிள் பழத்தை புசித்துவிட்டேன்” என்றார்

ஆனால் அவரோ”நான் உன்னை மன்னிக்க மாட்டேன்
நான் மறுமை நாளில் நீ செய்த
செயலுக்காக அல்லாஹ்விடம் உனக்கு எதிராக
வாதிடுவேன் என்றார்.

அந்த இளைஞர் மீண்டும் “என்னை தயவு செய்து மன்னியுங்கள்” என்று கெஞ்ச அவரோ எதுவும் பேசாமல் வீட்டினுல் சென்று விட்டார்.

ஆனால் அந்த இளைஞரோ வீட்டு வாசலிலே
காத்திருந்தார். லுஹருக்கு பிறகிலிருந்து
அஸர் நேரம் ஆரம்பமாகிய வரை அங்கேயே
காத்திருந்தார்.

அந்த மனிதர் வீட்டைவிட்டு வெளியே
வந்ததும் இளைஞர் மறுபடியும்
“என்னை மன்னியுங்கள். நான் செய்த செயலுக்காக உங்களுக்கு
பணியாளராக பணிபுரிகிறேன்.
எனக்கு உங்கள் மன்னிப்பை மட்டும் தந்துவிடுங்கள்
என மனம் உருககேட்க
அந்த மனிதர் “சரி உன்னை மன்னிக்கிறேன் .
ஆனால் ஒரு நிபந்தனை !” என்றதும்
அந்த இளைஞர்”அது என்ன?” என்று ஆவலாய் கேட்டார் .

அந்த மனிதர் “நீ என்னுடைய மகளை திருமணம் முடித்து கொள்ள வேண்டும் ” என்றதும் அந்த இளைஞர் மிகுந்த பூரிப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார்.

ஆனால் அவளுக்கு சில குறைபாடுகள் உள்ளது !
அவள் ஊமை , செவிடு, குருடு, ஊனமுற்றவள்
என்ற செய்தியை அந்த மனிதர் கூற
அதிர்ந்துபோனார் இளைஞர்.

மேலும் அம்மனிதர்”நீ என் மகளை திருமணம்
செய்யாதவரை நான் உன்னை மன்னிக்கமாட்டேன்” என்றார் .

ஒரு நாள் குறிப்பிட்டு அது திருமண நாளாக தேர்வு செய்யப்பட்டது.
அந்த நாள் வந்தது

இளைஞர் தடுமாற்றமுடனும் கவலை
தோய்ந்து அந்த வீட்டிற்கு வந்தார் .
மிகவும் விரக்தி தான் நலமாக வாழ
வேண்டிய வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்ற வருத்தம் .

வீட்டில் நுழைந்தார். ஒரு அழகிய பெண்ணை கண்டார்.
அந்த பெண் அவனை நோக்கி நடந்து வந்தாள்.
அந்த இளைஞருக்கோ ஆச்சர்யம் ,வியப்பு அந்த
பெண் ஊமை அல்ல!
செவிடல்ல!
குருடல்ல!
கால் ஊனம் அல்ல!

மேலும் அந்த பெண் “உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறதா ?
என்று கேட்க அவ்விளைஞர் “ஆம் உம் தந்தை
உன்னை ஊமை செவிடு குருடு ஊனம் என்றாரே?
என்று வினவ அதற்கு அந்த பெண்
” எனது தந்தை எனக்கு பொருத்தமான வாழ்க்கை
துணைவரை நீண்ட காலமாக தேடிவந்தார்.

அப்படி தேடிகொண்டிருந்த சமயம் அவர் என்னிடம்
உங்களைபற்றி நீங்கள் ஒரு ஆப்பிளை
சாப்பிட்டதற்காக இறைவனுக்கு பயந்ததை வைத்து

அவர் நீங்களே எனக்கு சரியான வாழ்க்கை துணை
என அறிந்து கொண்டார்.

மேலும் அந்த பெண் ” ஆம் நான் கண் தெரியாதவள்
தான் ஹராமானதை பார்ப்பதிலிருந்து!

நான் செவிடு தான் ஹராமானவற்றை
கேட்பதிலிருந்து !

நான் ஊமைதான்
தீய விஷயங்களை பேசுவதிலிருந்து.!
நான் ஊனம் தான் ஹராமான காரியத்திற்காக
நடக்காததிலிருந்து!!!

கூறிய வார்த்தையை கவனியுங்கள் ஹரமான காரியத்திற்காக
நடக்காததிலிருந்து
என்னவென யூகிக்கமுடிகிறதா??

பிறகு அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள்
மேலும் அந்த ஜோடிகளின் மகனார்

யாரென்று தெரியுமா ??

அவர்களின் மகன் தான் தலைசிறந்த இமாம் ரஹ்மஹுமுல்லாஹ்.
.அபூஹனீபா ரஹ்மஹுமுல்லாஹ் .

(இந்த நிகழ்வு பற்றிய ஆங்கில வீடியோவை காண இந்த லிங்க்கை
பார்க்கவும் . https://www.youtube.com/watch?v=j_gfXR2VVxQ

நட்புடன்
முகமத் ஜுபைர் அல்புஹாரி