Monthly Archives: ஒக்ரோபர் 2016

விபசாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள் -True Story

14045864_1788320608118821_4301911829976508737_n

விபசாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள் – அல்குர்ஆன்.

ஏனெனில் அதன் எதிர்வினை மிக கொடியது.

🍂🍂🍂🍂🍂🍂🍂
உண்மை சம்பவம்.
அரபு பத்திரிக்கையில் வெளிவந்தது. அப்பத்திரிக்கையில் அவர் பெயர் குறிப்பிட விரும்பவில்லை.ஆனால் அவருடைய வாழ்க்கையின் சம்பவத்தின் மூலம் மக்கள் படிப்பினை பெற வேண்டும் என அவரே அந்த சம்பவத்தை கூறுகிறார்.இதோ

“நான் கல்லூரியில் படித்த தருணம் இளைஞர், இளைஞி நண்பர்கள் இடையே ஹராமான பழக்கங்கள் இருந்தது.

ஒரு முறை ஒரு பெண்ணை சந்தித்தேன்.அவளுடன் ஹராமான உறவு ஏற்பட்டது.

அவள் என்னால் கர்ப்பமானாள். இந்த விடயம் அவள் குடும்பத்திற்கு தெரிந்து அதை மறைத்தனர்.

மேலும் என்னை பற்றி அந்த பெண் அவர்கள் வீட்டில் தெரிவித்தாள்,அவள் சகோதரன் என்னை தாக்கினான்.
அப்போது நான் ” எனக்கு உன் சகோதரி யாரென்றே தெரியாது அவள் யாரிடம் சென்று கர்ப்பமானாள் என்று தேடு போ” என்றேன்.

அவன் என்னை விட்டு சென்றான்.
மேலும் அவர்களுக்கு எனக்கெதிராக என்ன செய்வது என தெரியவில்லை.
எனவே என்னை விட்டுவிட்டனர். பிறகு அந்த சம்பவத்தையே மறந்துவிட்டேன்.

 

வருடங்கள் உருண்டோடியது.
நான் என்வீட்டில் நுழைந்த போது என் தாய் தரையில்சரிந்து கிடந்தாள், நான் அவளை தூக்கி விட முயன்றேன். மறுபடியும் தரையில் சரிந்தாள். மறுபடியும் தூக்கினேன்.
மறுபடியும் சரிந்தாள். இப்படியே மூன்று முறை இதே நிலைதான். பிறகு நான் ” யா உம்மா உங்களுக்கு என்ன நேர்ந்தது!!!” என்றேன்.
அதற்கு தாய் சப்தமிட்டு கதறியபடி “உன் சகோதரி” என்றாள்.

நான் “சகோதரிக்கு என்ன நேர்ந்தது????” என்றேன்.

அதற்கு தாய் “அவள் பக்கத்து வீட்டுகாரனால் கர்ப்பமாகியிருக்கிறாள்!!!”

சினத்துடன் பக்கத்து வீட்டு காரனிடம் சென்ற அவனை தாக்க ஆரம்பித்தேன். அப்போது அவன் ஒரு வார்த்தை சொன்னவுடன்ஒரு அம்பு என் இதயத்தை வந்து கிழித்ததுபோல் ஒரு உணர்வு, திகைத்து நின்றேன்.
“என்ன கூறி இருப்பான் அவன்??”

” எனக்கு உன் சகோதரி யாரென்றே தெரியாது!!! அவள் யாரிடம் சென்று கர்ப்பமானாள் என்று தேடு போ” என்று கூறினான்
சுபஹானல்லாஹ்.!!!

கல்லூரியில் படித்த தருணம் நான் அந்த பெண்ணின் சகோதரனிடம் சொன்ன அதே வார்த்தைகள்.
சில வருடங்களுக்கு முன் செய்ததின் கூலி தற்போது பெறுகிறேன்.

நான் கடுமையான மன வேதனை அடைந்தேன்.
பிறகு சிறிது காலத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்தேன்.நிச்சயம் முடிந்து திருமணம் நடந்தது. திருமண நாளில் எனக்கோ மிகபெரிய அதிர்ச்சி.!!!

எனக்காக மணப்பெண் நான் விபச்சாரம் செய்த அதே பெண்.
அவள் என்னிடம்” (நீ) பாதுகாக்கவில்லை. அல்லாஹ் உன்னை பாதுகாக்கவில்லை ” என்றாள்.

“யா அல்லாஹ் போதும் போதும் உன்னுடைய தண்டணை” அந்தநொடியில் அத்தணைதுன்பங்களையும் விழங்கி கொண்டு தவறிலிருந்து பாடம் பெற்று கொண்டேன்.

சிறு காலம் போனது , எங்களுக்கு அழகான நிலவு போன்ற பெண்குழந்தை பிறந்தது.

அவள் ஆறு வயதை அடைந்தபோது,வீட்டுக்கு வெளியிலிருந்து அழதுகொண்டே ஒடிவந்தாள்.

நான் என்ன நேர்ந்தது என கேட்டேன்…
வீட்டு வாட்ச்மேன் குழந்தையை பலாத்காரம் செய்து உள்ளான் …..

உணரபடவேண்டிய இறை வசனம்

#யார் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ அவர் தமக்கு தாமே தீங்கிழைத்து கொண்டார்.
-(அத்தலாக்65:1)

– முஹமது ஹசன் அரபி உரையிலிருந்து….

-தமிழ் மொழி பெயர்ப்பு

முஹமது ஜுபைர் அல்புஹாரி.

Continue reading

இஸ்லாத்தின் பார்வையில் கணவன் மனைவி…

14502772_551595478369609_4186101871965222910_n

By: Zubair Mohamed Albukhari

1. தங்கள் மனைவிக்கு (அழகான) ஆடைகளை அணிவித்து சுத்தமாகவும்
மனம் வீசும்மாறும் இருக்க செய்யுங்கள்.
மனைவி அழகான தோற்றத்தில் இருக்க
கணவன் விரும்புவது போலவே மனைவியும் கணவன் அழகான ஆடை
அணியவும் வீட்டில் நறுமணம் வீசவும்
விரும்புவாள்.

2. நாயகம் (ஸல்) அவர்கள் தங்கள் மனைவிகளை அவர்களுக்கு பிடித்த
செல்ல பெயர் கொண்டு அழைப்பார்கள்
நாம் நமது குழந்தைகளை செல்ல பெயர்
கொண்டு அழைப்பது போல உங்கள்
மனைவியரை அவளுக்கு பிடித்த
பெயரிலேயே அழையுங்கள்.
ஒருபோதும் அவர்களை மனம் புண்படும் புனைப்பெயர் கொண்டு
அழைக்காதீர்.

3. கொசுக்களைப் போல மனைவிகளை நடத்தாதீர். நம்மை கடிக்கும் வரை கொசுவைப் பற்றி நினைப்பதில்லை. இதைப் போலவே நாள் முழுவதும்
உழைக்கும் மனைவியைப் பற்றி நினைப்பதில்லை.
அவள் செய்யும் சிறுதவறு நேரும் போது
தான் மனைவியின் நினைவு வருகின்றது.
இவ்வாறு இருக்காதீர் அவள் செய்த நல்ல காரியங்களை எல்லாம் நினையுங்கள். அதை மறவாதீர்கள்.
அவள் நமக்கும், குடும்பத்திற்கும் உழைப்பதற்காக அவளை பாராட்டுங்கள்…

 

Continue reading